பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ், பிஜூமேனன் இணைந்து நடித்த அய்யப்பனும் கோஷியும் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிக்க பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தை ஹிந்தியில் வெளியிடக் கூடாது என தடை கேட்டு டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்.
காரணம் தெலுங்கில் இந்த படத்தில் ரீமேக் ரைட்ஸ் விற்பதற்கு முன்பாகவே இதை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை முதல் ஆளாக வாங்கியவர் தான் ஜான் ஆபிரகாம். தனது சில படங்களை முடித்துவிட்டு இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம் என திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது பீம்லா நாயக் ஹிந்தியில் வெளியானால் அவரால் நேரடியாக அய்யப்பனும் கோஷியும் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜான் ஆப்ரஹாம்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பீம்லா நாயக் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட தடை ஏதும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.. இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் ஆபிரகாம் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.




