ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
நடிகை கீர்த்தி சுரேசின் கவனமெல்லாம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மட்டுமே அதிகப்படியாக இருக்கிறது. அதேசமயம் தனது சொந்த ஊரான மலையாளத்தில் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடிக்கவும் தவறுவதில்லை. அந்தவகையில் மோகன்லால் நடிப்பில் வெளியான மரைக்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தற்போது வாஷி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளா.ர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழர் விஷ்ணு ராகவ் என்பவர்தான் இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் தான் தயாரித்துள்ளார். தற்போது இந்த படத்தில் டீஸர் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், கீர்த்தி சுரேஷ் இருவருமே வழக்கறிஞர்களாக நடித்திருக்கின்றனர். இருவரும் காதலர்களாக இருந்தாலும் ஒரு வழக்கில் நேரெதிராக ஒருவருக்கொருவர் மோதவேண்டிய சூழல் உருவாகிறது. அந்தவகையில் நீயா நானா பார்த்துவிடலாம் என்கிற ஈகோ யுத்தமாக இந்த படம் உருவாகி இருப்பது தற்போது வெளியாகியுள்ள டீசரிலேயே நன்றாக தெரிகிறது.