'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

கன்னடத்தில் உருவாகி இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப் சாப்டர் ஒன். யாஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவானது, இந்தப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய கொரோனா தாக்கம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் நாயகன் யாஷ் அழைப்பை ஏற்று, பெங்களூருக்கு சென்ற நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது என தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல கையோடு இந்த படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையையும் கைப்பற்றி வந்துள்ளார் பிரித்விராஜ்.




