இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்கில் நானி நடித்துள்ள ஷியாம் சிங்கா ராய் படம் கடந்த டிசம்பரில் வெளியானது. அதை தொடர்ந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் தற்போது நானி நடித்துள்ள படம் அன்டே சுந்தரானிக்கி.. இந்தப்படமும் விரைவில் ரிலீசாகவுள்ளது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் நடிகை நஸ்ரியா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று நானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நஸ்ரியா, தாங்கள் இருவரும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.. மேலும், “இந்த படப்பிடிப்பு முழுவதும் எங்களை உற்சாகப்படுத்தும் சக கலைஞராக, வழிநடத்தும் தலைவராக நீங்கள் இருந்துள்ளீர்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் மாறிவிட்டீர்கள்” என்றும் கூறியுள்ளார் நஸ்ரியா.