‛பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் | தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினி | ரஜினியின் ‛ஜெயிலர்' படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் | செப்டம்பர் 9ல் வெளியாகும் அமலாவின் கணம் | நான் பாடிய பாடலை அதிதி ஷங்கர் பாடியதால் எந்த வருத்தமும் இல்லை : பாடகி ராஜலட்சுமி | ஜின்னா - தெலுங்கு படத்தில் சன்னி லியோன் : போஸ்டர் வெளியானது | மும்பையில் ஜோதிகா, சூர்யா : வைரலாகும் புகைப்படங்கள் | செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : தமிழ்தாய் வாழ்த்துப் பாடி அசத்திய சிவகார்த்திகேயன் மகள் | சென்னைக்கு வரும் 'லைகர்' படக்குழு | ராஷ்மிகாவின் மூன்று முக்கிய ஆசைகள் |
மலையாள திரையுலகில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின்பாலி ஆகியோருக்கு அடுத்தபடியாக இளம் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் டொவினோ தாமஸ். தமிழிலும் மாரி 2 படத்தில் வில்லனாக, மற்றும் அபியும் அனுவும் என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டி அதன் பிறகு இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து பின் தனி ஹீரோவாக ஒரு படத்தையே தாங்கிப் பிடிக்கும் அளவிற்கு முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ள டொவினோ தாமஸ்.
சமீபத்தில் மலையாளத்தில் இவர் சூப்பர்மேனாக நடித்த மின்னல் முரளி என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பத்து வருடத்திற்கு முன்பு சரியாக இதே தினத்தில் தான் நான் கேமரா முன்பாக முதன்முதலாக நின்றேன் என்று கூறி தனது பத்து வருட திரையுலக பயணத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ள டொவினோ தாமஸ். இந்த பயணத்தில் தனக்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி கூறியுள்ளதோடு இன்னும் பத்து வருடங்கள் கழித்து இதேபோன்று ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் பதிவிடுவதற்காக இப்போதிருந்தே காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.