நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
மலையாள நடிகர் திலீப், நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக, கடந்த சில் வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.. பின்னர் மூன்றுமாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு அப்படியே அமுங்கி கிடக்கும் நிலையில், இதே கடத்தல் விவாகரம் தொடர்பாக திலீப்பின் நண்பர் ஒருவர் அவருக்கு எதிராக அளித்த புகாரின் படி, புதிய வழக்கு ஒன்று திலீப் மீது பதியப்பட்டது. இது கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு மிகப்பெரிய குடைச்சலை கொடுத்து வருகிறது.
இந்த புதிய வழக்கில் முன்ஜாமீன் கேட்டு திலீப் விண்ணப்பித்திருந்தாலும், இப்போதுவரை அவருக்கு அது கிடைக்கவில்லை. சமீபத்தில் மூன்று நாட்கள் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜரானார் திலீப். அதுகுறித்த விசாரணை அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் திலீப் வசம் உள்ள அவரது மொபைல் போன்களை நீதிமன்றத்தில் இன்று (திங்கள்) ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது. திலீப் கூடுதலாக ஒருநாள் அவகாசம் கேட்டும் நீதிமன்றம் சம்மதிக்கவில்லை. இதையடுத்து திலீப்பின் 3 மொபைல்கள், அவரது சகோதரர் (2) மற்றும் அவரது மைத்துனர் (1) ஆகியோருடையதையும் சேர்த்து மொத்தம் ஆறு மொபைல் போன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார் திலீப்.