'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மலையாள நடிகர் திலீப்புக்கு இது ரொம்பவே சோதனையான காலகட்டம் என்றே சொல்லலாம்.. நான்கு வருடங்களுக்கு முன் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, சிறை சென்று, ஜாமீனில் வெளியே வந்தார் திலீப். முன்பை விட அதிகளவு படங்களிலும் நடித்து வருகிறார். அதற்கேற்ற மாதிரி கடந்த மூன்று வருடங்களாக அந்த வழக்கும் ஆமை வேகத்தில் தான் நகர்ந்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குனருமான பாலச்சந்திர குமார் என்பவரே திடீரென அவருக்கு எதிராக திரும்பி, திலீப் ஜாமீனில் வெளிவந்தபின் நடிகை கடத்தல் சம்பந்தமான வீடியோ கிளிப்புகளை பார்த்தார் என சில பரபரப்பான தகவல்களை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்தார். .
இதனை தொடர்ந்து இந்த தகவல்களை காரணம் காட்டி இந்த வழக்கில் போலீஸாரால் தான் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று எண்ணிய நடிகர் திலீப் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தனக்கு முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். ஏற்கனவே மூன்று முறை இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம் நேற்று அந்த மனுவை கையில் எடுத்தது.. ஆனால் இந்தமுறையும் இந்த மனுவின் மீதான விசாரணையை ஒருநாள் தள்ளி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
காரணம் இந்த வழக்கில் பல விஷயங்களை இன்னும் விரிவாக விவாதிக்க வேண்டும் என்பதால், சனிக்கிழமை (இன்று) நீதிமன்றத்திற்கு விடுமுறை என்றாலும் கூட இந்த வழக்கை விசாரிப்பதற்காக நீதிமன்றம் செயல்படும் என நீதிபதி கூறியுள்ளார். அதனால் இன்று மாலைக்குள் இந்த வழக்கியல் முக்கிய உத்தரவு ஏதேனும் வரும் எதிர்பார்க்கலாம்..