ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா |

தெலுங்கில் ராகுல் சங்கிருத்தியன் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி, மடோனா செபஸ்டியன் ஆகியோர் நடித்துள்ள படம் ஷியாம் சிங்க ராய். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ள இந்த படம் டிசம்பர் 24-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் பிரமோஷன்களில் தற்போது நானி, சாய் பல்லவி ஆகிய இருவரும் பிசியாகி உள்ளார்கள்.
மேலும், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி கோல்கட்டாவை சேர்ந்த தேவதாசியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது சாய்பல்லவியின் மாறுபட்ட நடன அசைவுகளை கொண்ட பிரணவாலயா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சாய்பல்லவியின் மயக்கும் நடன அசைவுகள் அவரது நடன திறமையின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.