நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

மலையாள திரையுலகில் பிரபல கமர்ஷியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ், நடிகர் பிரித்விராஜை வைத்து 'கடுவா' என்கிற ஆக்சன் படத்தை இயக்கி வந்தார். இவர்கள் இருவரும் முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ள இந்தப்படம் கடந்த வருடம் துவங்கப்பட்டு ஒரு சில சிக்கல்களாலும் கொரோனா ஊரடங்காலும் ஒருகட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அப்படியே நின்றது.
அதையடுத்து பிரித்விராஜ் சில படங்களில் நடித்துவிட்டு, மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். அதேபோல ஷாஜி கைலாஷும் மோகன்லாலை வைத்து குறுகிய நாட்களிலேயே அலோன் என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இதற்குள் கடுவா படத்திற்கு எழுந்த சில பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்ட நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். ஒரு இளம் தோட்டக்காரனை பற்றிய கதையாக உருவாகும் இந்தப்படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றியாக கதையாக உருவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.