Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

யாருடா மகேஷ்ž

யாருடா மகேஷ்ž,Yaaruda Magesh
  • யாருடா மகேஷ்ž
  • சந்தீப்
  • நடிகை:டிம்பிள்
  • இயக்குனர்: மதன்
30 ஏப், 2013 - 14:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » யாருடா மகேஷ்ž

  

தினமலர் விமர்சனம்


"யாருடா மகேஷ்" படத்தின் டைட்டிலைப் போன்றே வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கும் இப்படமும், இதன் காட்சியமைப்புகளும் "யாருடா இந்தப்படத்தின் இயக்குநர் என்று கேட்க வைக்கும் ரகமென்றால் மிகையல்ல!

கதைப்படி லேஸி கேரக்டர் சிவா எனும் சந்தீப்புக்கு, தன் கல்லூரியில் படிக்கும் சிந்தியா எனும் டிம்பள் மீது காதல்! நண்பன் வசந்த் எனும் செம்புலி ஜெகனின் காதலி உதவியுடன் டிம்பளை உஷார் பண்ணும் சிவா அலைஸ் சந்தீப்பு, கல்லூரி இறுதி தேர்வில் பத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாமல் போகிறார். அவரது காதலி, சிந்தியா அலைஸ் டிம்பளோ கல்லூரியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று அடுத்த ப்ளைட்டிலேயே அமெரிக்கா பறக்கிறார்.

இதில் அதிச்சியாகும் சந்தீப், அரியர்ஸை கிளியர் செய்து அடுத்த ஆறு மாதத்திற்குள் அமெரிக்கா போய் காதல் வளர்ப்பார் எனப்பார்த்தால், ஆறு வாரத்திற்குள்ளாகவே அமெரிக்காவில் இருந்து டிம்பள் ரிட்டர்ன் ஆகிறார். காரணம், சந்தீப்பின் கரு, டிம்பளின் வயிற்றில் வளருவது தான். அச்சச்சோ, அப்புறம்? அப்புறமென்ன...? ஹீரோ, ஹீரோயினின் அப்பா-அம்மாக்கள் ஆரம்பத்தில் ஈகோ மோதலில் இறங்கி, அதன்பின் வேறு வழியின்றி(!) சம்மந்தி சம்மந்தி ஆகின்றனர்! குழந்தை பிறக்கிறது!!

குழந்தையோடு, குழந்தையாக விளையாடியபடி காலத்தை தள்ளும் ஹீரோ சந்தீப்பை திருத்த, ஹீரோயின் டிம்பள் தன் கஸின் பிரதரும் மனநல மருத்துவருமான ஸ்ரீநாத்துடன் சேர்ந்து கொண்டு செய்யும் அதிர்ச்சி வைத்தியம் தான் "யாருடா மகேஷ்" படத்தின் அதிர்ச்சியும், ஆச்சர்யமான, கலகலப்பும், கலாய்ப்புமான மீதிக்கதை!

சிவா எனும் பாத்திரத்தில் சந்தீப், தனது முந்தைய படமான "மறந்தேன் மன்னித்தேன்" படத்தை காட்டிலும், "யாருடா மகேஷ்" படத்தில் யாருடா சந்தீப் எனக் கேட்கும் அளவிற்கு கேஸீவலாக நடித்து ஜொலித்திருக்கிறார். பேஷ், பேஷ்!

சிந்தியா எனும் டிம்பள் செமயூத்புல், கிளாமர் அப்பீல்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! மனுஷி, நயன்தாரா, காஜல் அகர்வாலை எல்லாம் கூடிய விரைவில் ஓரங்கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நம் கண்களுக்கு மட்டுமல்ல, தன் கண்களிலும் எத்தனை கவர்ச்சி விருந்து வைக்கிறார். அடி ஆத்தாடி!!

ஹீரோவின் நண்பர் வசந்தாக வரும் செம்புலி ஜகன் இனி, டபுள்மீனிங் ஜகன்! சந்தானத்திற்கு காமெடியில் சரியான ஆல்டர்நேட் எனலாம்! மனநல மருத்துவராக வரும் ‌காமெடி ஸ்ரீநாத், மகனிடம் மேற்படி சி.டி. கேட்கும் ஹீரோவின் அப்பா லிவிங்ஸ்டன், அம்மா உமா பத்மநாபன், சுவாமிநாதன், சிங்கமுத்து உள்ளிட்ட எல்லோரும் "யாருட மகேஷ்" படத்தை தங்கள் கலர்புல் காமெடிகள் மூலம் தூக்கி நிறுத்தியிருக்கின்றனர்!

புதியவர் கோபிசுந்தரின் புதுமையான இசையும், ராணாவின் இனிமையான ஒளிப்பதிவும், சத்தியநாராயணனின் பளிச் படத்தொகுப்பும், ரா.மதன்குமாரின் எழுத்து-இயக்கத்தில், "யாருடா மகேஷ்" படத்தை மீண்டும் ஒருமுறை "பாருடா, பாருடா..." என நம்மை தூண்டி விடுகின்றன, தியேட்டரை நோக்கி துரத்தி விடுகின்றன என்றால் மிகையல்ல!

மொத்தத்தில், "யாருடா மகேஷ்" - "சூப்பர்டா சுரேஷ், சதீஷ், தினேஷ், ரமேஷ், ராஜேஷ்...!!"



வாசகர் கருத்து (5)

Padmavathi - Chennai,இந்தியா
25 மே, 2013 - 13:11 Report Abuse
Padmavathi படம் அறுவை, இது போல் படங்கள் இனி தொடர்ந்தால் தமிழ் சினமா துறை மெல்ல சாகும்
Rate this:
sivakumar - london,யுனைடெட் கிங்டம்
11 மே, 2013 - 11:59 Report Abuse
sivakumar ரொம்ப நல்ல படம்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
02 மே, 2013 - 19:23 Report Abuse
kumaresan.m " கல்யாணத்திற்கு முன்பு மற்றும் கல்லூரி படிக்கும் போதே கர்ப்பம் ....கதையே மேற்கத்திய கலாச்சாரத்தில் உருவானது போல் உள்ளதே ....இதற்க்கு அஹா அஹா ...ஓஹோ.... செம கவனிப்புட மச்சான் "...இது யாருட மகேஷ் அல்ல ...என்னடா படம் "
Rate this:
vembarasan - Dindigul,இந்தியா
01 மே, 2013 - 23:46 Report Abuse
vembarasan முதல் பாதி சரியான மொக்கை. இரண்டாவது பாதி பாக்கலாம்.
Rate this:
karthik - chennimalai,இந்தியா
01 மே, 2013 - 08:57 Report Abuse
karthik மொக்க படம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in