Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

காதலில் சொதப்புவது எப்படி

காதலில் சொதப்புவது எப்படி,Kadhalil Sodhapuvadhu Eppadi
07 மார், 2012 - 16:02 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » காதலில் சொதப்புவது எப்படி

  

தினமலர் விமர்சனம்



இளம் காதலர்களின் ஈகோ மோதல்களை சின்ன சில நிமிட குறும்படமாக எடுத்து இண்டர்நெட்டில் உலவவிட்டு பெரும் புகழ்பெற்ற இயக்குநர் பாலாஜி மோகன், அதையே ஒரு அழகிய திரைப்படமாக்கியிருக்கிறார். அதுதான் காதலில் சொதப்புவது எப்படி? திரைப்படம் மொத்தமும்!

கதைப்படி கல்லூரி காதலர்கள் சித்தார்த்தும், அமலாபாலும் ஈகோவால் பிரிந்திருக்கின்றனர். இதே மாதிரி அமலாபாலின் அப்பா-அம்மாக்களான சுரேஷூம் (மாஜி ஹீரோவேதான்) அம்மா சுரேகா வாணியும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் கல்யாண ஜோடிகள். ஈகோவால் பிரிந்திருக்கும் இந்த இரண்டு ஜோடிகளுமே தங்களது ஈகோவை மறந்து இணைந்ததா...? இல்லையா...? என்பது தான் காதலில் சொதப்புவது எப்படி கரு, களம், கதை எல்லாமும்!

பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி... பொண்ணுங்க மாதிரி ஆண்களால் காட்டவே முடியாது.... என அடிக்கடி பஞ்ச் டயலாக் பேசியபடி துறுதுறு கல்லூரி மாணவனாகவே வாழ்ந்திருக்கிறார் சித்தார்த். ரசிகர்களுக்கு தன் காதல் புட்டுகிட்ட கதையை போரடிக்காமல் சொல்லுவதிலாகட்டும், அமலாவிடம் ஆரம்பத்தில் வழிந்து பின் எரிச்சலடைவதிலாகட்டும் எல்லாவற்றிலுமே ஸ்கோர் செய்திருக்கிறார். அமலாபாலும் ஈகோ பிடித்த காதலியாக, தானும் சளைத்தவர் இல்லை என்று ப்ரேம் டூ ப்ரேம் நிரூபணம் செய்திருக்கிறார் வாவ்!

மாஜி ஹீரோ சுரேஷ், சுரேகாவாணி, சித்தார்த்தின் அப்பா ரவி ராகவேந்தர், அம்மா சிவரஞ்சினி எல்லோருமே பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்! நண்பர்களாக வரும் யுவன், யுவதிகளும் பிரமாதம்!

நிரவ்ஷாவின் அழகிய ஒளிப்பதிவும், தமனின் இதமான இசை எல்லாமும் சேர்ந்து பாலாஜி மோகனின் எழுத்து இயக்கத்தில் திரையில், காதலில் சொதப்பவில்லை,  ஜெயித்திருக்கிறது! வாவ்!!




------------------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்



பி.டெக் படிக்கும் சிதார்த், அமலாபால் நட்பு காதலாக அரும்பும் நேரத்தில் சின்ன உரசல். சூடான வார்த்தைகளால் அதை சண்டையாகி விலகும் இவர்கள் கடைசியில் இணைகிறார்கள். இதுதான் காதலில் சொதப்புவது எப்படி?

ஏறக்குறைய “குஷி’ டைப் சமாசாரம்தான். பிரியத்துக்குரிய பெண்ணிடம் இஷ்டப்பட்டு கஷ்டப்படும் “சூப் பாய்ஸ்’ பையன்களின் பார்வையில் இதைச் சொல்லியிருப்பது கொஞ்சம் புதுசு.

“லைஃப்ல எல்லாமே எனக்கு நல்லதான் நடந்துருக்கு. காதலைத் தவிர’ என புலம்பும் பெரிய இடத்துப்பையன் கேரக்டருக்கு சித்தார்த் வெகு பொருத்தம். அழகான அமலாபாலை இன்னும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். அமலாவின் எக்ஸ்பிரஷன்கள் கதைக்குப் பெரிய ப்ளஸ். போகிற வருகிற பெண்களிடமெல்லாம் ப்ரபோஸ் பண்ணி “பளார்’ வாங்கும் நண்பன், அவனை “காதல் குரு’வாக ஏற்றுக் கொண்டு அவஸ்தைப்படும் மாணவன் ஆகியோர் சொதப்பலுக்கு நடுவே சிக்ஸர் அடித்திருக்கிறார்கள். அமலாபாலுக்கு அழுகை வரும்போது “டேம் உடைஞ்சிடுச்சு’ என்று கிண்டல் பண்ணுவது, பெண்களின் முதல் பார்வையை மோனாலிசா டைப் ஓவியங்களோடு ஒப்பிடுவது போன்ற ஐடியாக்களில் படத்தின் யூத் டிபார்ட்மெண்ட் கவனிக்க வைக்கிறது.

சித்தார்த் காதலில் சொதப்பிய கதையை டி.வி. நிருபர் ரேஞ்சுக்கு படம் முழுக்க விளக்குவது ஓரளவுக்கு மேல் சலிப்பு. அமலாபாலின் அம்மா, அப்பாவின் விவாகரத்து எபிசோடை ரொம்ப சீரியஸாகக் காட்டிக்கொண்டே போய், கடைசியில் காமெடியில் முடித்து வைக்கிறார்கள். எடுபடவில்லை. ஆர்ட் டைரக்டரை ரொம்பவே வேலை வாங்கியிருப்பார்கள் போல. ஐ.ஏ.எஸ். ஆபிசர்கள் குடியிருப்பில் நுழைந்ததுபோல எல்லா லொக்கேஷனும் குடைச்சு பாலீஷ் போட்ட மாதிரி இருக்கிறது. ஏதோ காதலர் மாநாட்டுக்கு வந்ததுபோல எல்லோரும் லவ், ப்ரேக் அப், மறுபடியும் லவ் என்று பேசிக் கொண்டே போகிறார்கள்.

தமனின் இசையும் பாடல்களும் பரவாயில்லை. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு இந்த யூத் சப்ஜெக்டுக்குப் பலம். அறிமுக இயக்குநர் பாலாஜி மோகன் முன்பு எடுத்த குறும்படத்தை அவரே முழு நீளப் படமாக்கியிருக்கிறார். அரை மணி நேரக் குறும்படத்தில் இருந்த கச்சிதம் இரண்டு மணிநேர படத்தில் மிஸ்ஸிங்.

காதலில் சொதப்புவது எப்படி? - சொதப்பல் ஓவர்டோஸ்.

குமுதம் ரேட்டிங் - ஓகே





-------------------------------------------------------------



கல்கி சினி விமர்சனம்



தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஃப்ரெஷ்ஷான படம் பார்த்து எத்தனை நாளாச்சு? கல்லூரிக் காதல்தான் சப்ஜெக்ட். சித்தார்த்தும் அமலாபாலும் காதலர்கள். காதலியைக் கவர முடியாமல், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடும் சித்தார்த்தின் முகபாவங்கள், அத்தனை கச்சிதம். இந்தக் காதலில் ஏற்படும் குழப்பங்கள், குளறுபடிகள், சந்தேகங்கள், சச்சரவுகள் அனைத்தையும் நகைச்சுவையில் தோய்த்து, இசையில் குளிப்பாட்டி, ரசிகர்களைத் திணற அடிக்கிறார் டைரக்டர்.

சித்தார்த் தானே ரசிகர்களைப் பார்த்து தன் சோகக் கதையை செம ஜாலியாகச் சொல்லிவிட்டு, கூடவே ஸீனுக்குள்ளே போய் நடிக்கவும் செய்கிறார். துருத்தலே இல்லாத வித்தியாசமான கதை சொல்லும் உத்தி. எதைப் பார்த்தாலும் ஒரு கிண்டல், நக்கல்! அவர் சொல்லும் ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் தியேட்டரில் பயங்கர விசில், உற்சாகம்!

இளமைக் காதலுக்கு காண்ட்ராஸ்ட், அமலாபாலின் பெற்றோராக வரும் சுரேஷ்-சுரேகா வாணி ஜோடி. டைவர்ஸ் செய்ய முற்படும் இருவரும் கடைசியில் சேருகிறார்கள். சித்தார்த்தின் நண்பர்களாக வரும் எல்லாப் புதுமுகங்களும் மனத்தில் நிற்கிறார்கள்.

படத்தின் ஹைலைட்டுகளில் முக்கியமானது தமனின் இசை. பாடல்கள் கேட்கும்போது இனிமை; மனத்தில் நிற்க மறுக்கின்றன. பின்னணி இசையோ, நகைச்சுவைக்கு பக்கவாத்தியம். குறிப்பாக, வளையோசை கலகலவென, ரண்டக்க ரண்டக்க பாடல்கள் பயன்படும் இடங்கள்.

புது இயக்குனர் பாலாஜி மோகனின் நெருக்கமான திரைக்கதையும், வசனங்களும் நம்பிக்கை அளிக்கின்றன. ஒரு ஸீனில் தானே வந்து அறை வாங்குகிறார். இயக்குனர் தமது ஃப்ரெஷ்ஷான ப்ரசெண்டேஷனால் மனம் கவர்கிறார். இது ஒரு டிரெண்ட்செட்டர் படமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

சொதப்பல் இல்லை; இளமைக் கொண்டாட்டம்!



வாசகர் கருத்து (28)

ம.எ.faruk - chidambaram,இந்தியா
29 மார், 2012 - 10:51 Report Abuse
 ம.எ.faruk good
Rate this:
கார்த்திக் - sydney,ஆஸ்திரேலியா
17 மார், 2012 - 13:00 Report Abuse
 கார்த்திக் பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற கடின உழைப்பில் வந்து வெட்டிப்பயல்களால் உருவாக்கப்பட்ட கடந்த 5 வருடங்களாக வந்த நூற்றுக்கணக்கான மதுரை பின்னணியில் வந்த அழுகிய படங்களுக்கு பிறகு பார்த்து அனுபவித்து ரசிக்கும் படமாக வந்துள்ளது 'காதலில் சொதப்புவது எப்படி'. அனைவரும் மிக அற்புதமாக செய்துள்ளனர். இந்திய படங்களுக்கே முன்னோடியாக திகழ்ந்து வந்த தமிழ் திரை உலகத்தை பாழ் படுத்த முயன்ற வெட்டி இயக்குனர்கள், மற்றும் கதாசிரியர்கள் இப்படத்தை பார்த்து கற்றுக் கொள்வார்களாக
Rate this:
musthafa - erode,இந்தியா
10 மார், 2012 - 09:49 Report Abuse
 musthafa எல்லோரும் இந்த படத்ல வர character மாதிரி தான் இருக்காங்க
Rate this:
Srini - London,யுனைடெட் கிங்டம்
10 மார், 2012 - 03:58 Report Abuse
 Srini Nice and decent movie.
Rate this:
Venkat - Accra,கானா
10 மார், 2012 - 03:53 Report Abuse
 Venkat ஓவர் டோஸ். அரை மணி நேரத்துக்கு மேல பார்க்கிறது கொஞ்சம் கடி தான்
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in