கிங்ஸ்டன்
விமர்சனம்
தயாரிப்பு : ஜீ ஸ்டுடியோ மற்றும் பேர்ளல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் : கமல் பிரகாஷ்
நடிகர்கள் : ஜிவி பிரகாஷ் குமார், திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், குமரவேல், சாபுமோன் அப்துசமாத், ஆண்டனி, பிரவீன், பயர் கார்த்திக்.
வெளியான தேதி : 07.03.2025
நேரம் : 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
கதைக்களம்
தூத்துக்குடி அருகே உள்ள மீனவ கிராமம் ஒன்றில் பல ஆண்டுகளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும், மீறி கடலுக்குள் செல்பவர்கள் பிணமாகத்தான் திரும்புவார்கள் என்றும் கூறுகின்றனர். அந்த கிராமத்தை சேர்ந்த ஜிவி பிரகாஷ், சிறு வயது முதலே எப்படியாவது கடலுக்குள் செல்வேன் என அவரது தாத்தா குமரவேலுவிடம் சொல்லி வருகிறார். அதற்காக போட் ஒன்றை வாங்க நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அடாவடியாக பல வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கிறார். அதோடு அந்த மீனவ கிராமத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ள சாபுமோன் அப்துசமாத் சொல்லும் வேலைகளை செய்து வருகிறார். ஒரு நாள் நடுக்கடலில் சரக்குகளை கைமாற்றும் போது கடற்படை அதிகாரிகளிடம் சிக்குகிறார். அப்போது தான் ஜி வி பிரகாஷுக்கு பெட்டிகளில் போதைப் பொருள் இருப்பது தெரிய வருகிறது. இதனை அடுத்து அங்கிருந்து தப்பித்து கரை வந்ததும் நேராக ரவுடி சாபுமோனை அடித்து கட்டிப்போட்டு கடலுக்குள் கடத்தி சொல்லுகிறார் ஜிவி பிரகாஷ், அப்போது கடலுக்குள் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கின்றனர். அந்த ஆபத்து என்ன? ஏன் அந்த மீனவ கிராமத்தினர் கடலுக்குள் செல்வதில்லை? இதற்கு பின்னால் இருப்பது என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
அரண்மனை, பங்களா, வீடு, தண்ணீர், சப்தம் என பல வடிவங்களில் பேய்யையும், பேய் படங்களையும் பார்த்த நமக்கு கடலில் பேய் இருப்பதை வித்தியாசமாக சொல்லி உள்ளார் இயக்குனர் கமல் பிரகாஷ். கடலில் உள்ள கடல் அட்டை பூச்சிகளை எடுத்து விற்பனை செய்வது போல் கடலுக்கு அடியில் இருக்கும் தங்கத்தை வைத்து ஹாரர் படத்தை கொடுத்துள்ளார். முதல் பாதி முழுவதும் சாதாரணமான மீனவப்படம் போலும், இரண்டாம் பாதி முழுவதும் நடுக்கடலில் பேய் படமாகவும் கொடுத்து பயமுறுத்துகிறார் இயக்குனர்.
டைட்டில் ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார். மீனவ கிராமத்து இளைஞனுக்கு உண்டான நடை உடை பாவனைகளுடன் தூத்துக்குடி ஸ்லாங்கையும் அழகாக பேசி அசத்தியுள்ளார். திவ்யபாரதிக்கு படத்தில் பெரிதாக கேரக்டர் எதுவும் இல்லை என்றாலும் ஜிவி பிரகாஷ் உடன் இரண்டாம் பாதி முழுவதும் வருகிறார். ஜிவி பிரகாஷின் நண்பர்களாக நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சேத்தன், அழகம்பெருமாள், குமரவேல், சாபுமோன் ஆகியோர் மிரட்டலான நடிப்பை தந்துள்ளனர்.
கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் படம் பளிச்சிடுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
பிளஸ் & மைனஸ்
ஹாரர் படங்களின் ரகசியத்தை இயக்குனர் கரெக்டாக புரிந்து கொண்டு இந்த படத்தை தந்துள்ளார். முதல் பாதி தரையிலும், இரண்டாம் பாதி கடலிலும் என வித்தியாசமாக படத்தை எடுத்துள்ளார். அதோடு கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. கடல் முழுவதும் எலும்பு கூடாக காட்சியளிப்பது பிரமிப்பு. இருப்பினும் ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு ஒவ்வொரு பிளாஷ்பேக் சொல்லுவது சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் அளவுக்கு அதிகமான பேய்களை காட்டி இருப்பது எரிச்சல் அடைய செய்கிறது.
கிங்ஸ்டன் - ஸி கோஸ்ட்
கிங்ஸ்டன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கிங்ஸ்டன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
ஜி.வி.பிரகாஷ் குமார்
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.