10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் |

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 25வதுபடம் ‛கிங்ஸ்டன்'. இதில் நாயகியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார். அழகம் பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கடலில் நடக்கும் ஹாரர் திரில்லராக உருவாகி உள்ளது. இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பட விழாவில் பேசிய திவ்ய பாரதி, ‛‛இந்த படத்தின் கதையை சொல்ல வந்தபோது கமல் ஒரு லுக் அவுட் வீடியோ காண்பித்தார். அப்போதே இதில் நடிக்க முடிவு பண்ணிவிட்டேன். ஜிவி உடன் இரண்டாவது படம். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். முதல்முறையாக நான் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன். நல்ல பண்ணியிருக்கேன் என நம்புகிறேன். கிங்ஸ்டன் விஷுவல் டிரீட்டாக கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும்'' என்றார்.