Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ராஜபாட்டை

ராஜபாட்டை,Rajapattai
01 ஜன, 2012 - 11:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ராஜபாட்டை

 

தினமலர் விமர்சனம்



கலை படங்களையும், கமர்ஷியல் படங்களாக நடித்து ரசிகர்களை கவருவதில் வல்லவரான விக்ரம், முழுக்க முழுக்க கமர்ஷியலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "ராஜபாட்டை".

சினிமாவில் பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவுடன் ஜிம்பாயாக சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் விக்ரம், ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் முதியவரான கே.விஸ்வநாத்தை காபந்து செய்து, தன் கூடவே தங்க வைத்து கொள்கிறர். விக்ரம்-தீக்ஷா சேத்தின் காதலுக்கு கலர்ஃபுல் டிப்ஸெல்லாம் தரும் கலக்கல் பெரியவரான கே.விஸ்வநாத் வாழ்க்கையில் அப்படி ஒரு சோகம்! அதாகப்பட்டது, தன் மறைந்த மனைவி பெயரில் விஸ்வநாத் நடத்தி வரும் அனாதை சிறுவர்கள் ஆசிரமத்தை, தன் அரசியல் லாபத்திற்காக அடித்து பிடுங்குகிறார் அவரது மகன் அவினாஷ்! அதை அவரிடமிருந்து ஆட்டையை போடுகிறார் அரசியல் தலைவியும், நிலமோசடி ராணியுமான அக்கா ரங்கநாயகி எனும் சனா. அவருக்கு ஆதியும் அந்தமும் ஆதரவாக இருக்கிறார் வாப்பா எனும் பிரதீப் ராவத். மகன் அவினாஷிடமிருந்து பெரியவர் கே.விஸ்வநாத்தை காக்கும் விக்ரம், அக்கா சனா, வாப்பா பிரதீப் இருவரிடமிருந்து அனாதை ஆசிரம நிலத்தை மீட்டு மீண்டும் விஸ்வநாத் விருப்பபடி அந்த இடத்தில் அனாதை சிறுவர் விடுதிக்கு அடிக்கோள் நாட்டுவது தான் "ராஜபாட்டை" படத்தின் மொத்த கதையும்!

விக்ரம் ஜிம்பாயாக, பெரிய ஹீரோவாகும் ஆசையில் கோலிவுட்டை ரவுண்ட் அடிப்பது வரை ஓ.கே. அதில் சி.பி.ஐ. ஆபிஸராக, சீக்கிய ஆபிஸராக மாறி நிலமோசடி விவகாரத்தில் வாப்பாவை வதைப்பது எல்லாம் ரொம்பவே ஓவராகத் தெரிகிறது! இது மாதிரி படக்காட்சிகளிலும், ஒரு பாடல் காட்சிகளிலும் சேர்த்து 17 வேடங்களில் விக்ரம் வருவதெல்லாம் கதைக்கேற்ற காட்சிகளை பிடிக்காமல் இயக்குநருடன் சேர்ந்து விக்ரமும் கண்ணாமூச்சி காட்டியிருப்பதாகவே தோன்றுகிறது!

படத்தின் புதுமுகநாயகி தீக்ஷா சேத்திற்கே போதுமான சீன்கள் இல்லாத பட்சத்தில் க்ளைமாக்ஸ் முடிச்சு, ஸ்ரேயாவுடனும், ரீமா சென்னுடனும் விக்ரம் ஆடிப்பாடும் பாடல்காட்சி ஏதோ எடுத்து விட்டோம் காசை கொட்டி என வலிய திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. தீக்ஷாவின் நடிப்பை அடுத்த படத்தில் பார்த்துவிட்டு தான் விமர்சிக்க முடியும்! இதில் அவ்வளவு சின்னரோல் அம்மணிக்கு பாவம்! கே.விஸ்வநாத், தம்பி ராமையா, பிரதீப்ராவ், அவினாஷ், சனா, அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் தங்கள் பங்கை சரியாகவே செய்திருக்கின்றனர்!

யுவனின் பின்னணி இசையும் (பாடல்கள் அல்ல...) மதியின் ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம்! வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை என யதார்த்தமான படங்களை எளிமையாகவும், இனிமையாகவும் இயக்கிய சுசீந்திரன், கமர்ஷியலாக இயக்கிய "நான் மகான் அல்ல" அளவிற்கு கூட ராஜபாட்டையில் கலக்காதது வருத்தமே!

தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலமோசடி விவகார வழக்குகளை விளையாட்டாக படமாக்கி இருக்கிறார்கள்! இன்னும் சற்று விளையாட்டை குறைத்து அதன் வீரியத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருந்தால் "ராஜபாட்டை", "ரசிக்கும் பாட்டை"யாக இருந்திருக்கும்!



------------------------------------------------------


குமுதம் விமர்சனம்


நிலங்களை அபகரிக்கும் அரசியல்வாதிக்கும் அதற்குத் தடையாக முளைக்கும் ஒரு ஸ்டண்ட் மேனுக்கும் இடையேயான மோதல்தான் ராஜபாட்டை.

அரசியல் கட்சித் தலைவியான அக்கா என்கிற ரங்கநாயகிக்கு நில அபகரிப்புதான் முழுநேர வேலை. ஒரு வயோதிகரின் நிலத்தையும் சுருட்ட முயல்கிறார். அங்குள்ள குழந்தைகள் இல்லத்துக்காகவும், அவருடனான நட்புக்காகவும் ஜிம் பாய் அனல் முருகன் இந்த வில்லங்கத்தில் நுழைகிறார். அரைக்கைச் சட்டையைத் தூக்கி ஆர்ம்ஸ் காட்டும் விக்ரம், அனல் முருகன் கேரக்டருக்கு செம பொருத்தம். அவர் பத்துப் பேரைத் துரத்தித் துரத்தி அடிப்பதை மறு கேள்வி இன்றி நம்ப முடிகிறது. காதல், மோதல் இரண்டிலுமே விக்ரமின் நடிப்புக்குத்தான் இடமே இல்லை.

ஹீரோயின் தீக்ஷா சேத் மூக்கும் முழியுமாக இருக்கிறார். வில்லனால் கடத்தப்பட்டு, விக்ரமுக்கு திடீர் வேலை வைக்கிறார். இவனோட நீ சினிமாவுக்குப் போறே... போகணும் என்று விக்ரமுக்காக தாத்தா விஸ்வநாத் தீக்ஷாவை மிரட்டுவது கலகல ஏரியா. அக்கா சனாவின் அடாவடி நடிப்பு பரவாயில்லை. நில அபகரிப்பு தனத வலது கையாகச் செயல்பட்ட தாதா போலீஸில் சிக்கிக்கொள்ள, சனா அவரை மிரட்டியே தற்கொலை செய்ய வைப்பது பகீர் வில்லத்தனம்.

வில்லன்களால் தீக்ஷா கடத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை விக்ரம் கண்டுபிடிக்கும் பவர் கட் ஐடியா. அக்காவின் கையாளை விக்ரம் அண்ட் கோ கடத்தும்போது அந்த ஏரியாவில் நடக்கும் காமெடி ஷூட்டிங் போன்ற இடங்களில் சபாஷ் போடலாம். விக்ரம் சி.பி.ஐ. பெயரில் வில்லனை வெவ்வேறு கெட்டப்களில் வந்து விசாரிப்பது பொறுமைக்குச் சோதனை. எப்போதும் மனதுக்குள் புகுந்து விளையாடும் யுவனின் இசை இதில் ஏமாற்றம் அளிக்கிறது.

நில அபகரிப்பு உட்பட நிகழ்கால அரசியலோடு பின்னிப்பிணைந்த பிரச்னைகளை கையில் எடுத்துள்ள இயக்குநர் சுசீந்திரன் பாராட்டுக்குரியவர். பக்கா கமர்ஷியல் படம் என்றால் திரைக்கதைக்காக மெனக்கெடத் தேவையில்லை என அவர் நினைத்ததில்தான் ராஜபாட்டையில் ஓட்டை விழுந்து விட்டது.

ராஜபாட்டை - அமைதி ஊர்வலம்.

குமுதம் ரேட்டிங் - ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in