பன்னிக்குட்டி,Pannikutty

பன்னிக்குட்டி - சினி விழா ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - அனுசரண்
இசை - கே
நடிப்பு - கருணாகரன், யோகி பாபு, லட்சுமிப்ரியா
வெளியான தேதி - 8 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த சில படங்களின் கதைகளைப் பார்க்கும் போது, அட, இப்படி ஒரு கதையா என ஆச்சரியப்பட வைக்கும். சில படங்கள் அட, இதெல்லாம் ஒரு கதையா என யோசிக்க வைக்கும். சில படங்கள், அட, இதில் எங்கே கதை இருக்கிறது என கேட்க வைக்கும். இந்த 'பன்னிக்குட்டி' மூன்றாவது ரகம்.

'சுழல்' என்ற விறுவிறுப்பான இணையத் தொடரின் சில பகுதிகளை இயக்கிய அனுசரண் தான் இந்த 'பன்னிக்குட்டி' படத்தையும் இயக்கியுள்ளார் என்பதை நம்ப முடியவில்லை. இரண்டு மணி நேரப் படத்திலும் எந்த ஒரு இடத்திலும் சுவாரசியம் இல்லை என்பது வியப்பாக உள்ளது.

அடிக்கடி தற்கொலை செய்து தோற்றுப் போகிறவர் கருணாகரன். சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி பைக் ஒன்றைத் திருடுகிறார். அந்த பைக்கில் போகும் போது பன்றி மீது இடித்துவிடுகிறார். மீண்டும் அந்தப் பன்றி மீது இடித்தால் தான் கருணாகரனுக்கு நல்லது நடக்கும் என்கிறார் சாமியார். அந்தப் பன்றி எங்கிருக்கிறது என்று நண்பர்களுடன் தேடுகிறார் கருணாகரன். பன்றி கிடைத்ததா ?, சாமியார் சொன்னது போல பன்றி மீது மீண்டும் இடித்தாரா என்பதுதான் இந்தப் படத்தில் கதை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கருணாகரன், யோகி பாபு, சிங்கம்புலி, ராமர், தங்கதுரை, திண்டுக்கல் லியோனி என ஆறுவர் கூட்டணி படம் முழுவதும் இருந்தும் அருமையான நகைச்சுவையைத் தராமல் அதிர்ச்சியடைய வைக்கிறார்கள். இதோ, சிரிக்க வைப்பார்கள், அதோ சிரிக்க வைப்பார்கள் என கடைசி வரை காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம்.

கருணாகரன் ஜோடியாக நடித்துள்ள லட்சுமிப்ரியா, நடிகை சுனைனாவின் தங்கை போலவே இருக்கிறார். காமெடிதான் இல்லை, இவர்கள் காதல் காட்சியையாவது கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாம்.

நகைச்சுவைப் படம் எனச் சொல்லி இசையமைப்பாளர் கே--வை அழைத்து வந்திருப்பார்கள் போலும். அவரும் என்னதான் செய்வார். மதுரை பக்கத்து கிராமம்தான் கதைக்களம். அதை யதார்த்தமாகக் காட்டுவதில் ஒளிப்பதிவாளர் சதீஷ் முருகன் உழைத்திருக்கிறார்.

எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த படங்கள் இந்த ஆண்டில் நிறையவே வந்துவிட்டது. அந்தப் பட்டியலில் இந்தப் படமும்.

பன்னிக்குட்டி - பண்ணிட்டீங்க…

 

பன்னிக்குட்டி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பன்னிக்குட்டி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓