மாமாங்கம்,mamangam
Advertisement
2

விமர்சனம்

Advertisement

மாமாங்கம் : விமர்சனம்

நடிகர்கள் : மம்முட்டி, உன்னி முகுந்தன், பிராச்சி டெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா, சித்திக், மாஸ்டர் அச்சுதன் மற்றும் பலர்


இசை : எம்.ஜெயச்சந்திரன்


ஒளிப்பதிவு : மனோஜ் பிள்ளை


டைரக்சன் : எம்.பத்மகுமார்பதினேழாம் நூற்றாண்டில் நடக்கும் வரலாற்று கதை,.. தங்களுக்கு உரிமையான இடத்தை எதிரியிடம் பறிகொடுத்த வள்ளுவ நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை எதிரி நாட்டில் நடக்கும் மாமாங்கம் என்கிற விழாவில் கலந்துகொண்டு எதிரியை வீழ்த்தி பரம்பரை பகையை தீர்க்க முயல்வதுதான் படத்தின் கதை.சேவர்கள் எனப்படும் வள்ளுவ நாட்டைச் சேர்ந்த வீரர்களில் ஒருவரான மம்முட்டி இப்படி ஒருமுறை எதிரியை பழி தீர்க்க சென்றவர் திரும்பி வரவே இல்லை. அதன்பின்னர் 24 வருடங்கள் கழித்து நடக்கும் மாமாங்கம் விழாவில் அதே பரம்பரையைச் சேர்ந்த, கலைகளை கற்றுத்தேர்ந்த உன்னி முகுந்தனும் அவரது சகோதரி மகன் சிறுவன் அச்சுதனும் பகை முடிக்க எதிரி நாட்டுக்கு கிளம்பிச் செல்கிறார்கள்.. செல்லும் வழியில் இத்தனை வருடங்களாக ஊர் திரும்பி வராத மம்முட்டி, இவர்களுக்கு உதவியாக வழியில் குறுக்கிடுகிறார்..


அப்போதுதான் பரம்பரை பகை என்று எதிரிகளுடன் போரிட்டு உயிரை வீணாக மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்கிற எண்ணத்திலேயே ஊரைவிட்டு அவர் ஒதுங்கி இருப்பது தெரியவருகிறது.. இருந்தாலும் ஊர் பெருமையை காப்பதற்காக சபதம் செய்துவிட்டு வந்த உன்னி முகுந்தனும் மற்றும் அச்சுதனும் மாமாங்கம் விழாவில் எதிரி நாட்டு அரசனை கொல்ல முற்படுகிறார்கள்.. இந்த முறையாவது அவர்களால் தங்கள் பரம்பரை பகையை தீர்த்துக் கொள்ள முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்..


வரலாற்று படங்களில் முதன்மையாக ரசிகர்கள் தேடும் அம்சம் அதன் நேர்த்தி.. அந்த கதை நடக்கும் கால கட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்.. மாமாங்கம் படத்தில் அதற்கான மெனக்கெடல் ரொம்பவே தெரிகிறது.. அதனாலேயே கதையுடனும் காட்சிகளுடனும் இயல்பாக நம்மால் ஒன்ற முடிகிறது... பழசிராஜாவுக்கு பிறகு மீண்டும் ஒரு போர் வீரனாக மம்முட்டியை பார்க்கும்போது பத்து வருடங்களாக மனிதர் அப்படியே இருக்கிறாரே என்கிற ஆச்சரியம் எழாமல் இல்லை.. அதிலும் திடீரென நீண்ட கூந்தலுடன் மம்முட்டி தோன்றும் காட்சி எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் ஷாக் பிரம்மாண்டமான ஆரம்பகட்ட சண்டைக்காட்சியில் மிரட்டும் மம்முட்டி கிளைமாக்ஸிலும் ஆக்சன் விருந்து படைக்கிறார்.. இடையில் நீண்டநேரம் கதையிலிருந்து காணாமல் போவது சற்று ஏமாற்றம் அளித்தாலும் விறுவிறுப்பாக பயணிக்கும் கதை நம்மை சமாதான படுத்துகிறது.


இளம் வாலிபரான உன்னி முகுந்தன் கட்டுமஸ்தான உடலுடன் ஒரு வீரனுக்கு உண்டான அனைத்து இலக்கணங்களுடன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. அவர் மட்டுமல்ல அவரது சகோதரி மகனாக வரும் சிறுவன் அச்சுதன் கிளைமாக்ஸ் காட்சியில் மம்முட்டி, உன்னி முகுந்தன் இருவரையுமே பின்தள்ளிவிட்டு சபாஷ் என கைதட்ட வைக்கிறார்.. ஆக்சன் காட்சிகளில் இவ்வளவு தூரம் ஒரு சிறுவன் நடிக்க முடியுமா என்கிற பிரமிப்பிலிருந்து நாம் எழுவதற்கே கொஞ்ச நேரம் ஆகிறது.


எதிரி நாட்டு அரசனின் விசுவாச பாதுகாவலனாக வரும் சித்திக், தங்கள் நாட்டிற்கு வந்த வெளிநாட்டு வியாபாரியை யார் கொன்றது என விசாரிக்கும் காட்சிகள், நிகழ்கால போலீஸ் விசாரணைக்கு சமமாக உருவாக்கப்பட்டுள்ளது.. அது தொடர்பான காட்சிகள் சற்று நீளமாக இருந்தாலும் ஓரளவு சுவாரசியம் அளிக்கவே செய்கின்றன


கதாநாயகிகள் என சிறுவனின் அம்மாவாக கனிகா மற்றும் உன்னி முகுந்தனின் மனைவியாக வரும் அனு சித்தாரா இருவருமே சென்டிமெண்ட் ஏரியாவில் கண்களை கசக்குகிறார்கள். இன்னொரு பக்கம் பாலிவுட் நடிகை பிராச்சி டெஹெலான் மற்றும் இனியா இருவரும் நடனம் மற்றும் மம்முட்டி உன்னி முகுந்தனுக்கு உதவுவது என ராஜ காரியங்களை சிறப்பாக கவனித்திருக்கிறார்கள்.


படத்திற்கு மிகப்பெரிய பலம் எம்.ஜெயச்சந்திரனின் பின்னணி இசைதான்.. அதேபோல ஒளிப்பதிவாளர் மனோஜ் பிள்ளை நம்மை தனது கேமரா கண்களால் கதை நிகழும் காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார்.. இவருக்குப் பின்னணியில் தூணாக இருந்து செயல்பட்டிருக்கும் கலை இயக்குனரின் மிகப்பெரிய பங்களிப்பையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.


என்றோ நடந்து முடிந்த நிகழ்வுக்காக, வருடங்கள் பல கடந்து பகையை நீட்டிக்க வேண்டாம், அடுத்த தலைமுறையாவது அமைதியுடன் வாழட்டும் என்கிற கருத்தை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாகியுள்ளது.. மம்முட்டியின் கதாபாத்திரமும் அதைத்தான் பிரதிபலிக்கிறது.. இடைவேளைக்கு பின் படம் சற்றே மெதுவாக நகர்வது பலவீனம். விசாரணை காட்சிகளையும், அரண்மனை நாட்டிய காட்சிகளையும் சற்று குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்..
மொத்தத்தில் மாமாங்கம் மிகப்பெரிய அளவில் பிரமிக்க வைக்க விட்டாலும் ரசிகர்கள் பார்க்க வேண்டிய பட்டியலில் இடம் பிடிக்கிறது.

 

மாமாங்கம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மாமாங்கம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மம்மூட்டி

மலையாள திரையுலகினர் சூப்பர் ஸ்டார் என போற்றப்படுவர் மம்மூட்டி, 1951-ம் ஆண்டு செப்., 7ம் தேதி, கோட்டயம் அருகே உள்ள வைகோமில் முகமது குட்டியாக பிறந்தவர். சினிமாவுக்காக மம்மூட்டி என பெயரை மாற்றிக்கொண்டார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சல்பாத் என்ற மனைவியும், சுருமி, துல்கர் சல்மான் என்ற மகனும் உள்ளார். தற்போது இவரது மகனான துல்கர் சல்மானும் நடிக்க வந்துவிட்டார். இருந்தாலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார்.

மேலும் விமர்சனம் ↓