Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

குட்டநாடன் மார்பாப்பா (மலையாளம்)

குட்டநாடன் மார்பாப்பா (மலையாளம்),kuttanadan marpappa
  • குட்டநாடன் மார்பாப்பா (மலையாளம்)
  • இயக்குனர்:
02 ஏப், 2018 - 14:02 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » குட்டநாடன் மார்பாப்பா (மலையாளம்)

நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், சாந்தி கிருஷ்ணா, அதிதி ரவி, சலீம் குமார், இன்னொசன்ட், அஜூ வர்கீஸ், சௌபின் சாஹிர், ரமேஷ் பிஷரோடி, தர்மஜன் போல்காட்டி, ஹரீஸ் பெருமுனா,

டைரக்சன் : ஸ்ரீஜித் விஜயன்

அழகான கிராமம் ஒன்றில் போட்டோகிராபராக ஸ்டுடியோ நடத்தி வருபவர் குஞ்சாக்கோ, அவரது அம்மா (பன்னீர் புஷ்பங்கள்) சாந்தி கிருஷ்ணா. குஞ்சாக்கோவுக்கு புது கேமரா வாங்குவதற்காக அவரது அம்மா, வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி கொடுக்கிறார். ஆனால் எதிர்பாரதவிதமாக தற்கொலை செய்யப்போகும் ஊர் பஞ்சாயத்து தலைவரின் மகளான அதிதி ரவியை காப்பாற்றும் குஞ்சாக்கோ, அதிதியின் பிரச்சனை ஒன்றை தீர்க்க அந்த பணத்தை செலவிடுகிறார்.

அதிதிக்கும் குஞ்சாக்கோவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால் அதிதியின் கண்டிப்பான அப்பா இன்னொசன்ட், அந்தஸ்து காரணமாக இந்த காதலை ஏற்க மறுத்து, கோடீஸ்வர மாப்பிள்ளைக்கு அவரை மணம் பேசி முடிக்கிறார். அதன்பின் வெளிநாட்டுக்கு டாக்டர் படிப்புக்கு செல்லும் அதிதி கல்யாணத்துக்காக திரும்பி வருகிறார்.

குஞ்சாக்கோ இன்னும் பழைய காதலியின் நினைவாக இருந்தாரா, இல்லை காதலியை கைப்பற்ற அதிரடி முயற்சி எடுத்தாரா, இல்லை அதிதி தான் மனம் மாறி நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி குஞ்சாக்கோவுடன் இணைந்தாரா என எந்த வழக்கமான கேள்விகளுக்கும் இடம் வைக்காமல் குஞ்சாக்கோ போபன் ஒரு புது ரூட்டில் ஸ்வீட் ரிவெஞ் எடுக்கிறார். அடு என்ன என்பது க்ளைமாக்ஸ்.

குஞ்சாக்கோ படங்கள் எதுவுமே ரொம்பவும் வெயிட்டான கதைகளை கொண்டிராது என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம்.. படத்தை சம்பவங்களின் கோர்வையாக காமெடியாக நகர்த்திச்செல்ல வேண்டும் என்கிற விதிப்படி இந்தப்படமும் அதேபாணியில் கலகலப்புடன் நகர்கிறது. குஞ்சாக்கோ போபனும் தனது வழக்கமான பங்களிப்பை கொடுத்துள்ளார். அதிலும் நீச்சல் தெரியாத அவர் தண்ணீரில் விழும் ஒவ்வொரு காட்சியும் குபீர் சிரிப்பு ரகம்.

போதாக்குறைக்கு குஞ்சாக்கோ போபனுடன் காமெடி நடிகர்கள் பலரும் கூட்டணி அமைத்துள்ளதால் படம் முழுதும் களைகட்டுகிறது. குஞ்சாக்கோவின் அம்மாவாக வந்தாலும் இந்தமுறை முழுதும் காமெடியில் இறங்கி இருக்கிறார் சாந்தி கிருஷ்ணா.

கதாநாயகி என பெயரளவுக்கு மட்டுமே வந்துபோகும் அதிதி ரவி பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. அதிதி ரவியின் தங்கையாக வருபவர் தனது அக்கா உபயோகப்படுத்திய பொருளை பயன்படுத்தும் விஷயம் கடைசியில் குஞ்சாக்கோ மூலமாக வேறுவிதமாக நிறைவேறுவது செம ட்விஸ்ட்

காதலிக்காக பாதிரியார் ஆன அஜூ வர்கீஸ், கூகுள் மேப் வழிகாட்டுதலில் வழி மேரி போகும் சௌபின் சாஹிர், படம் முழுக்க குஞ்சாக்கோவுடன் கூடவே சுற்றும் தர்மஜன் போல்காட்டி, காதலிக்காக கிட்னியை தானம் செய்து பல்ப் வாங்கும் சலீம்குமார், திருடுவதில் கூட தனித்துவம் கட்டும் ஹரீஷ் பெருமுனா, கோடீஸ்வரனாக இருந்தாலும் கைச்செலவுக்கு கையில் கிடைக்கும் பொருட்களை விற்று செலவழிக்கும் ரமேஷ் பிஷரோடி என ஒவ்வொரு காமெடி நடிகர்களும் தனித்து தெரிகிறார்கள்.

படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு காமெடி தோரணங்களால் களைகட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜித் ரவி.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in