ரகுமான் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் தன்னை அடுத்த கட்டத்துக்கு செல்ல அவரே எடுத்த அசாதாரணமான புதிய முயற்சி இந்த ஒன் ஹார்ட் படம்.
ஏ.ஆர்.ரகுமானின் ஒன் ஹார்ட் திரைப்படம், அவர் 14 அமெரிக்க நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சிகளின் ஆவணம். கான்செர்ட் ஜானர் வகையிலான இத்திரைப்படம் இந்தியாவில் தயாரித்து திரையிடப்படுவது இதுவே முதல் முயற்சி. இதை வெறும் இசை நிகழிச்சிகளின் தொகுப்பு என்று கருதாத வகையில் திரைப்படமாக நேர்த்தியாக இயக்கியுள்ளார் ரஞ்சித் பாரோத்.
ரகுமானின் 25 வருட இசை பயணத்தை ஒரு சில வரிகளில் விவரிப்பது மட்டுமல்லாமல் ஒரு நபர் அவருடைய வாழ்க்கைக்கான தேடுதலை மேற்கொண்டு வெற்றிபெற ஆன்மிகம் எப்படி உதவியிருக்கிறது என்பதை மிக அழகாக விளக்குகிறது இத்திரைப்படம். அழகான அற்புதமான டால்பி அட்மாஸ் எபக்ட்டுடன் கூடிய இசையோடு இதை விவரிக்கும்போது ஒவ்வொரு இளைஞர் மத்தியிலும் தன் முனைப்பாற்றலை ஏற்படுத்தும் வல்லமை பெற்றியிருக்கிறது.
ஒரு இசை அமைப்பாளருக்கு அவருடைய இசை குழு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கியிருக்கிறார் ஆஸ்கார் நாயகன். இந்த கான்செர்ட்டில மிகத்திறமையான பாடகர்களான ஜோனிதா காந்தி, ஹரிச்சரன் சேஷாதிரி, ஷிராஸ் உப்பல் மற்றும் அன்னெட் பிலிப் பங்கேற்றுள்ளனர்.
அன்னெட்டுடன் ரகுமான் பாடும் அந்த பாடல் ரசிகர்களின் கண்களை இமைக்க விடாமல் கவர்கிறது. வையனலிஸ்ட் ஆன் மேரி கால்ஹவுன், கிட்டாரிஸ்ட் கேபா ஜெரிமியா, குழலிசை கலைஞர் அஸ்வின் ஸ்ரீநிவாசன், கீபோர்ட் கலைஞர் கார்த்திகேயன் தேவராஜன், பாஸ் கிட்டாரிஸ்ட் மோகினி தே, ட்ரம்மர் மற்றும் இப்படத்தின் இயக்குனரான ரஞ்சித் பற்றிய அறிமுகத்துடன் துவங்கும் படம் பின் ஒவ்வொருவருடைய திறமைகளை தனி முக்கியத்துவதுடன் காட்டுகிறது. இதில் ஆன் மேரியின் வயலினிற்கு மயங்காதவர்களும் ரஞ்சித்தின் அசாத்தியமான பெர்பார்மென்ஸிற்கு மெய்சிலிர்க்காதவர்களும் இருக்க முடியாது.
ஏ.ஆர்.ரகுமானின் ஒன் ஹார்ட் கான்செர்ட் திரையரங்குகளில் தவற விடக்கூடாத மியூசிக்கல் எக்ஸ்பீரியண்ஸ்
மொத்தத்தில், ஒன் ஹார்ட்.. வின் ஹார்ட்..