தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் பணிகள் காரணமாக அவருக்கு நீர்சத்து குறைவு என்ற பாதிப்பு என்றும், வழக்கமான பரிசோதனை என்றும் கூறப்பட்டது.
தற்போது இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் (ரம்ஜான்) நோன்பு இருந்ததாலும், சைவமாக மாறியதாலும் எனக்கு இரைப்பையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். நான் வாழ வேண்டும் என்று இவ்வளவு பேர் விரும்புகிறார்கள் என்பதை அறிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் ஸ்டேடியத்தில் வருகிற மே 3ம் தேதி ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள 18 நகரங்களில் 'வொண்டர்மென்ட்' என்கிற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இதற்கான ஒத்திகையில் பிசியாக இருக்கிறார் ரஹ்மான்.