2.25

விமர்சனம்

Advertisement

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகும் நேரடி படம் ஸ்பைடர். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் பல நுணுக்கமான தகவல் சேகரிப்பு பின்னணியில் கதை புனையப்பட்டுள்ளது.

படத்தோட ஒன் லைன் முதலில் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும், என்னவென்றால், சாவை பார்த்து சந்தோஷப்படும் வில்லனிடம் இருந்து, அவன் பழி வாங்க துடிக்கும் அப்பாவி மக்களை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்ற மனித தன்மையை முருகதாஸ் பேசிருக்கும் படம் தான் ஸ்பைடர். இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்றே சொல்லலாம்

படத்தின் கதைப்படி மகேஷ் பாபு பொதுமக்களின் தொலைபேசி தகவல் வழி வேலையை பார்த்து வருகிறார் ,டைம் பாஸ் ஆக மக்களின் செல் போன் பேச்சுக்களை ஒட்டு கேட்க தொடங்குகிறார் ,அப்படி அவர் ஒட்டு கேட்கும் போது பொதுமக்கள் மாட்டிக்கொள்ளும் காதல் முதல் கட்ட பஞ்சாயத்து வரை அத்தனை பிரச்சனைகளையும் அசால்ட்டாக கையில் எடுத்து களை எடுக்கிறார். இப்படி ஒட்டு கேட்டு தான் ஹீரோயின் கூட மாட்டுகிறார்.

ஒவ்வொரு பிரச்சனைகளயும் கையில் எடுக்கும் மகேஷ் பாபு, ஒரு நாள் ஒரு மாணவிக்கு ஒரு பிரச்னை வருகிறது. இதில் இருந்து அந்த மாணவியை காப்பாற்ற தன் தோழியான போலிசை அங்கு அனுப்புகிறார். அந்த இடத்தில் மாணவியும் போலீசும் கொல்லப் பட, தான் அனுப்பி வைத்த காவல் துறை பெண் கொடூரமாக இறந்து போகும் பின்னணியை கண்டுபிடிக்க துடிக்கிறார் ஹீரோ.

பலவித தேடல்களுக்கு பிறகு பரத் தான் அந்த கொலைக்கு காரணம் என்று கண்டுபிடிக்கிறார். பரத்தை சும்மா படத்தில் வர வைக்க முடியாது என்று ஐதராபாத்தில் இருக்கும் வொண்டர் லா தீம் பார்க்கில் ஒரு சண்டை காட்சி வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் அது ரொம்ப மிரட்டலாக இருக்கிறது. இவ்வளவு சண்டை போட்டும் பரத்துக்கு பின் அவர் அண்ணன் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் என்பதையும் ஹீரோ அறிகிறார். இறுதியாக அண்ணன் தம்பி இருவரையும் எப்படி ஹீரோ தண்டனை தருகிறார் மக்களை மீட்டார் என்பதே மீதி கதை.

பிரின்ஸ் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு படத்தில் ரொம்ப ரிஸ்க் எடுத்து சண்டை போட்டாலும் பாவம் அவர் முகம் மட்டும் அப்பாவியாக தெரிகிறார். எல்லா சீனிலும் குழந்தை தனமாகவே தெரிகிறார். மொத்த கதையை சுமந்தாலும் தமிழுக்கு ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது.

கதாநாயகி ரகுல் ப்ரீத் ஓவராக நடிப்பது போல தெரிகிறது. இவர் பெரிதாக படத்துக்கு பலம் இல்லை, பாடலுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

இயக்குனர் எஸ்ஜே.சூர்யா சிறு வயது நடிகர் மற்ற நடிகர்களை விட சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது முக பாவனைகள் அழகு, படத்தில் வெட்டியான் குடும்பத்தில் பிறந்து சாவின் சத்தத்தையும், அழுகுரலையும் கேட்டு பழக்கப்பட்ட வில்லன் எஸ்ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டுகிறார்.

துப்பறியும் ஒரு சின்ன கதையை எடுத்துக்கொண்டு, சில அறிவியல் நுட்பத்தோடு கதையை சொல்ல முற்பட்டாலும், படத்தில் பல இடங்களில் கொட்டாவி வருகிறது. அங்கங்கே தொய்வுகள், சண்டையை கூட இழு இழு வென இழுத்திருக்கிறார். பல காட்சிகளில் லாஜிக் இல்லை, ஒரு சாதாரண மனிதன் மக்களின் அத்தனை ரகசியங்களையும் எடுத்து, இவரே எல்லாம் செய்ய காவல் துறை அனுமதிக்குமா என்று யோசித்தால் இது சினிமா என்று தான் சொல்ல தோனுகிறது.


ஆர்.ஜே பாலாஜி பெரிதாக ஒன்றும் படத்தில் பேசவில்லை என்பது ஒரு மைனஸ்.

படத்தின் நிறைவாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் மட்டுமே மனிதம் இருப்பதாக உணர்கிறோம். மற்றபடி இன்றைய வாழ்க்கையில் மக்கள் வாட்ஸ் அப், சமூக வலைதளங்கள், இணையதளம் என்று நேரத்தை வீணாகுகின்றனர். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் குறைந்து வருகிறது என்ற கருத்தை சொல்ல வருகிறார் என்று புரிகிறது. என்ன ஒன்று படம் முடிந்து வெளில வரும்போது இது முருகதாஸ் படம் தானா என்ற சந்தேகம் வராமல் இல்லை.

சந்தோஷ் சிவன் ஒளிபதிவு பலம், ஹரிஷ் இசை வழக்கம் போல ஸ்டைலீஷ். இயக்குனர் காஸ்ட்யூம்ல செலுத்தின கவனத்தை, கதையில் கொஞ்சம் செலுத்தி இருக்கலாம் போல, அந்த அளவு படு வீக் கதை.

மொத்தத்தில், "ஸ்பைடர்... கதை இன்றி அறுந்து தொங்கும் வலை...!"

 

ஸ்பைடர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஸ்பைடர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓