2.5

விமர்சனம்

Advertisement

ரேணிகுண்டா பட இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்கா, தான்யா, பசுபதி, சிங்கம் புலி, ரேணுகா போன்றோர் நடித்துள்ள படம். பேரன்பும் பெருங்காதலும் சொல்லும் படம் தான் கருப்பன்.

காளைகளை அடக்கும் கருப்பனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். கதைப்படி எந்த வேலை வெட்டியும் இல்லாமல், உறவினர் சிங்கம் புலியுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார். குடி, கூத்து என்று படத்தில் ரகளை கட்டி இருக்கிறார் சேது. ஊரில் காளையை அடக்கும் போட்டி வருகிறது. அதில் பசுபதி காளையும் பங்கேற்க, கூட்டத்தில் காளையை அடக்க விவாதம் நடக்கிறது. என் காளையை அடக்குபனுக்கு என் தங்கையை மணம் முடித்து தருகிறேன் என்று வாக்கு கொடுக்கிறார். எதோ பழைய படம் போல் இருக்கிறது என்று யோசிக்க தோணும், போட்டியில் காளையை அடக்கினாரா, அந்த பெண்ணை மடக்கி மணந்தாரா என்பது மீதிக் கதை.

எதிர்பாராது தான்யாவை சந்திக்கிறார் சேது. தன்யாவின் தைரியம் பார்த்து ஆசை ஒரு பக்கம், சேது குடித்து விட்டு வேலை வெட்டி இல்லது ஊரை சுற்றுவதால் மாடு பிடிக்கிறவனை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அண்ணன் என்று பாசம் பொங்குகிறார் தான்யா.

அண்ணனுக்காக சேதுவை மணம் முடிக்கிறார் தான்யா. இருவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்க்கை நடத்த வில்லன் இல்லாமல் எப்படி, தான்யாவின் அண்ணன் மனைவி காவேரியின் தம்பி தான் வில்லன் பாபி சிம்ஹா. தான்யா மீது ஒரு தலை காதலால் உருகுகிறார். கல்யாணம் ஆன பிறகு சேது தான்யாவை பிரிக்க, கூட்டாளி தவசியுடன் சேர்ந்து பல திட்டங்களை தீட்டுகிறார். கிளைமாக்ஸ்ல பாபு சிம்ஹா திட்டம் எல்லாம் நிறைவேறியதா, சேது என்ன ஆகிறார். பசுபதி என்ன ஆகிறார் என்று படத்தில் விறு விறுப்பை கூட்டி கதை சொல்லி இருக்கார் பன்னீர்.

விஜய் சேதுபதிகிட்ட ஒரு ப்ளஸ் என்ன வென்றால் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிராரோ அதே ரோலில் படம் முழுக்க வாழ்ந்து விடுகிறார் மனுஷன். ஆனால் படத்துக்கு படம் ரொம்ப மனைவி ரொமான்ஸ் காட்சி சலிப்பை தட்டுகிறது. மற்றபடி காளையை அடக்குவது தொடங்கி எம்ஜிஆர் பாட்டு பாடி டான்ஸ் ஆடுவது, சிங்கம் முத்துவுடன் சேர்ந்து ரகளை பண்றது, பேசும் வசனம் அத்தனையிலும் அருமை பதிவு.

நாயகியாக தான்யா இந்த படத்தில் நடிப்பில் ஒரு படி முன்னேறி இருக்கிறார். சேது அம்மா உடல் நலம் குன்றியவராக இருந்தும் அவரை கவனிப்பதும், வேலைக்கு போக சொல்லி சேதுவை அடித்து துரத்துவதுமாக நடிப்பில் அசத்தல் அன்பு.

எத்தனை வில்லத்தனம் செய்ய முடியுமோ அத்தனையும் பாபி படத்தில் செய்கிறார். சரத் லோகியை ஏவி விடுவதாகட்டும், கூட்டத்தில் சேதுவை மாட்டி விடுவதாகட்டும், தன் அக்கா கணவன் பசுபதியை பழி வாங்குவதாகட்டும், அந்த புல்லட்டில் அவர் வந்தாலே திரையில் கோபம் தெரிக்கிறது

சிங்கம் புலி சேதுபதிக்கு சரியான தேர்வு இந்த படத்தில் அவரின் எதார்த்த நடிப்பு பேசும் வசனங்கள், நம்மை அறியாமலே சிரிப்பை வர வழைக்கிறது.

இமான் இசையில் பாடல்கள் ஒகே.

கருப்பன் படத்தில் சில காட்சிகள் சேதுபதி படமும், கொம்பன் படமும், சமீபத்தில் வந்த இன்ன பிற படங்களை நினைவுப்படுத்தினாலும் கருப்பன் ரசிகர்களை கவர்வான்.

 

பட குழுவினர்

கருப்பன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓