வி.ஆர்.இண்டர்நேஷனல் மூவிஸ் எனும் பேனரில் புதியவர் வி.ரவி தயாரித்து , கதாநாயகராக நடித்தும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "ஏகனாபுரம் ".
வி.சுரேஷ் நட்சத்திரா எழுத்து , இயக்கத்தில் வி.ரவியுடன் ரித்திகா , ஜோதிஷா , செவ்வாழை ,ராஜசிம்மன் , பூவிதா , ஜானகி, பாவா லட்சுமணன் , நெல்லை சிவா , கோவை பாபு , மணிமாறன் , சங்கர் , சிட்டிசன் மணி , உமா உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ள இப்படத்தின் கதைப்படி ., ஏகனாபுரத்தில் வசிக்கும் நாயகர் ரவி ., பறை இசைக் கலைஞர் .அதே ஊரில் வந்தது மேய்க்க குடும்பத்துடன் வந்து குடியிருக்கும் ரித்திகாவுக்கு ரவி மீது காதல்.ரவிக்கும் ரித்தி கா மீது அதே, அதே .இருவரது காதலும் பூத்து , காய்த்து , கனி யாகும் தருவாயில், ரித்திகா குடும்பத்துக்கு உதவும் வாத்து முட்டை வியாபாரி ராஜசிம்மன்., ரித்திகாவை ராங்ரூட்டில் டச் செய்யப் பார்க்கிறார்.
அதற்குள் ,ராஜசிம்மனிடமிருந்து காப்பாற்றி .,ரித்திகாவை தன் சொந்தமாக்கிக் கொள்ளத் துடிக்கிறார் ரவி .ஆனால் , ரவியின் ஆசையை நிராசையா க்க களமிறங்குகிறார் அந்த ஏரியாவில் செல்வாக்கும் , சொல்வாக்கும் மிக்க ஜோதிஷா.ஜோதிஷா பறைக் கலைஞன் ரவியின் காதலுக்கு கட்டையைப் போடக் காரணம் என்ன ? ஜோதிஷாவுக்கும் ரவிக்குமிடையேயான முன்விரோதம் என்ன ? தடை பல கடந்து ரவி - காதலி ரித்திகாவை கரம் பிடித்தாரா ? அல்லது ஜோதிஷாவால் மரணம் தழுவினாரா.. ? என்பது உள்பட இன்னும் பல வினாக்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் கிராமிய மணம் கமழ விடை சொல்ல முயற்சித்திருக்கிறது" ஏகனாபுரம்" படத்தின் கதையும் , களமும்.
கதாநாயகராக வரும் வி.ரவி பறை இசைக் கலைஞனாக பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார். ஆனாலும் , ஆடல் , பாடல் மற்றும் , சண்டை காட்சிகளில் இன்னும் போதிய ஹோம் ஒர்க் செய்து கேமரா முன் நின்றிருந்தார் என்றால் மேலும் சிறப்பாய் இருந்திருக்கும்.
வாத்து மேய்க்கும் பெண்ணாக ரித்திகா ., அசப்பில் அப்படியே இருக்கிறார். வாத்து அம்மணியாகவே வாழ்ந்திருக்கிறார்.
செல்வாக்கு மிக்க ஏரியா பெண்மணியாக வில்லியாக ஏகப்பட்ட சோகத்தை தாங்கிபழிக்கு பழிவாங்கும் ஜோதிஷா ., "தூள் "ஷா!
வாத்து முட்டை வியாபாரி கம் வில்லனாகராஜசிம்மன் , அடுத்த ஊர் ஆட்டோ டிரைவர் கம் நாயகரின் நண்பராக மணிமாறன் , மற்றும் சங்கர் , சிட்டிசன் மணி , செவ்வாழை ,பாவா லட்சுமணன் , நெல்லை சிவா , கோவை பாபு , பூவிதா , ஜானகி, உமா உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரமும் பாத்திரமறிந்து "பளிச் " சிட்டுள்ளனர்.
டி.எஸ்.மணிமாறனின் இசையில் , கண்ணாடி நீரோடை ..., முத்தே பவள மே ..., செம்பருத்தி பூவ பார்த்தேன் .... , வெண்ணிலவே ... , மாடி வீடு ... உள்ளிட்ட ஐந்து பாடல்களும் மனம் மயக்கும் ராகம். அதிலும் , நெய்தலூர் சங்கப் பிள்ளை எழுதி இப்பட இசைஞர் மணிமாறனுடன் பாடியுள்ள முத்தே பவள மே பாடல் பறை இசையை பட்டி தொட்டியெங்கும் .. அல்ல , அல்ல .. சிட்டி , மார்டன் சிட்டி எங்கும் பறைசாற்றும் பாடல் என்றால் மிகையல்ல!
ஏ.எஸ்.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு யதார்த்தமான கிராமத்தை அழகாக பதிவு செய்திருக்கிறது. உதயசங்கரின் படத்தொகுப்பும் அப்படியே இயக்குனருக்கு உதவி இருக்கிறது.
வி.சுரேஷ் நட்சத்திராவின் எழுத்து , இயக்கத்தில் ., கதையிலும் திரைக்கதையிலும் இருக்கும் அழுத்தம் இயக்கத்தில் பெரிதாய் வெளிப்படாது போயிருப்பது வருத்தம்! ஆனாலும் , கிராமத்து மக்களின் யதார்த்த வாழ்க்கை , அழகிய கிராமிய பின்புலங்கள் ஆகியவற்றில் கவருகிறது "ஏகனாபுரம்."
ஆக மொத்தத்தில் " பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் "ஏசனாபுரம்" , ஏகாந்த புரமாக இனித்திருக்கும்! என்றாலும் , ஒருவகையில் ., இன்றைக்கும் கிராமங்களின் யதார்த்த புரமாக தெரிவது ஆறுதல்!"