Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ரெமோ

ரெமோ,remo
21 அக், 2016 - 12:23 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ரெமோ

தன் நெருங்கிய நண்பர் ஆர்டி ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தன் ஆஸ்தான நாயகி கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க சிவகார்த்திகேயன், பெண் வேடமெல்லாம் போட்டு நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் "ரெமோ".


சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியுடன் காமெடி சதீஷ், நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன்... உள்ளிட்ட ஒரு பெரும்

நட்சத்திர பட்டாளமும் பங்கு பெற புதியவர் பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில், இரண்டரைமணி நேர லவ் - காமெடி படமாக வெளிவந்திருக்கும் "ரெமோ" படத்தின் கதைப்படி, பெண் என்றாலே சற்று பயந்து ஒதுங்கும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்பது லட்சியம். ஆனால், அவருக்கு நடிப்பதற்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு கட்டத்தில், கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு நாயகர் தேர்வு நடைபெறுவதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார். முதலில காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடித்துக் காட்டச் சொல்கிறார் ரவிக்குமார்.


ஆனால், சிவாவுக்கோ, லவ்வும், ரொமான்ஸும் நடிப்புக்குக் கூட வரவில்லை. அதனால், கே.எஸ்.ரவிக்குமார்., சிவகார்த்திகேயனை துரத்துகிறார். ஆனாலும், அவருக்கு நகைச்சுவை நன்றாக வருவதை கண்டு, தான் அடுத்ததாக எடுக்கும் படத்தை பற்றி அவரிடம் சொல்லி, அந்தபடத்தில் ஹீரோவுக்கு லேடி - நர்ஸ் கெட்டப் என்றும் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அந்த படத்திலாவது வாய்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் களத்தில் குதிக்கிறார். சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் சென்று கே.எஸ்.ரவிக்குமாரை கவர நினைக்கிறார். உடனே லேடி - நர்ஸ் கெட்டப் போட்டு சென்று அவரிடம் நடித்துக்காட்டுகிறார். அப்படியும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பில் திருப்தியில்லை. இதனால், சோகத்துடன் லேடி கெட்டப்பில் பேருந்தில் வீடு திரும்பும் சிவகார்த்திகேயனை யோகிபாபு, பெண் என நினைத்து காதல் சில்மிஷம் செய்கிறார். இதைப் பார்க்கும் சிவாவின்., மாஜி ஒருதலைக் காதலி கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனை லேடி என்று கருதி., யோகி பாபுவிடமிருந்து காப்பாற்றுகிறார்.


மேலும், அவரை, பெண் நர்ஸ் என நினைத்து தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையிலேயே அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறுகிறார். இதை கீர்த்தியுடன் இணைய தனக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பாக கருதி, அந்த கெட்டப்பிலேயே இருந்து அவர் மனதை மாற்றி கீர்த்திக்கு நிட்சயிக்கப்பட்ட திருமணத்தை தடுத்து நிறுத்தி, தன் காதலியை கைப்பிடிக்க நினைக்கிறார். காதல் விஷயத்திலாவது சிவகார்த்திகேயனின் எண்ணம் ஈடேறியதா? சினிமாவில் வாய்ப்பு கிடைத்தா? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறது "ரெமோ" படத்தின் மீதிக்கதையும் , களமும்!


சிவகார்த்திகேயன், நாயகராகவும், லேடி கெட்ப்பிலும் அசத்தலாகவும் அழகாகவும் இருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் நர்ஸாக அவரது சில்மிஷங்களும், சேட்டை கரும் நன்றாகவே இருக்கிறது. அதேபோல், படம் முழுக்க லேடி கெட்டப் என்றாலும் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சியிலும் சிவகார்த்திகேயன் பொளந்து கட்டியிருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு, அவர் காட்டும் ஸ்டைலும் காட்டும் லுக்கும் செம கிக்.


அதிலும், கீர்த்தி சுரேஷ் திடீரென பெயர் கேட்டதும் "ரெமோ" எனும் பெயரைக் கூறி பேனரில் ஹன்சிகா மோத்வானி புகைப்படத்தைப் பார்த்து விட்டு, அவர் மாதிரி என் பெயர், ரெஜினா மோத்வானி... சுருக்கமாக ரெமோ என சமாளிக்கும் இடத்தில் பெண் வேட சிவா., நச் - டச் என்றால், யாரும், லவ் பண்ணக் கூடாதுன்னா, "சினிமா படத்தில் எல்லாம் சிகரெட், லிக்கர் ஈஸ் இன்ஜூரியஸ் டூ ஹெல்த் என்று கார்டு போடுகிறார்களே... அது மாதிரி அதே படங்களின் லவ் சீன் வரும் போதெல்லாம் லவ் ஈஸ் இன்ஜூரியஸ் டூ லைப்புன்னு எழுத்து போட சொல்லுங்க..." என்று அலும்பு பண்ணும் ஆண் நாயகர் பாத்திரம் வரை சிவா சிறப்பாக செய்திருக்கிறார்.


நர்ஸ் கெட்டப்பில் நாடகமாடி கீர்த்தி சுரேஷின் மனதை மாற்றி காதலில் ஒன்று சேர சிவா செய்யும் முயற்சிகள் ஒவ்வொன்றும் ஹாஸ்யம் என்பது படத்தின் பெரும் பலம். சிவகார்த்தியின் லேடி கெட்அப்பும் அந்த கெட்அப்புடன், இயக்குனர் ரவிக்குமாரிடம் அவர், "அழகான பொண்ணுதான்..." பாடலுக்கு குலுக்கி குலுக்கி ஆடும் இடம், உள்ளிட்ட சேஷ்டைகள் படத்திற்கு பலம்.


இளம் பெண் டாக்டராக கதாநாயகி - கீர்த்தி சுரேஷ், அசால்ட்டாக, அம்சமாக நடித்திருக்கிறார். அம்மணி இதற்கு முந்தைய படங்களைக் காட்டிலும் அழகாக இருக்கிறார், அசத்தலாக நடித்தும் இருக்கிறார். வெல்டன் கீர்த்தி. நிச்சயித்தவனை கைவிடவும் முடியாமல், ஆசைப்பட்டவனை அடையவும் முடியாமல் தவிக்கும் கீர்த்தி சுரேஷின் யதார்த்த நடிப்பு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.


சதீஷின் டைமிங் காமெடி படத்திற்கு பெரியளவில் கைகொடுக்க முற்பட்டிருக்கிறது. நான்கடவுள் ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோரின் சேஷ்டைகளும் களேபரம்.. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல், மகனின் காதலியை பார்த்தவுடன் அவர் தான் தன் மருமகள் என அடம் பிடிக்கும் நாயகரின் வெள்ளந்தி அம்மாவாக சற்று இடைவெளிக்குப் பின் ஈர்ப்பாய் நடித்திருக்கிறார்.


கீர்த்திசுரேஷின்அப்பாவாக வரும் "ஆடுகளம்" நரேன், சீப் டாக்டர் பிரதாப் போத்தன், சினிமா டைரக்டராகவே வரும் கே.எஸ்.ரவிக்குமார், கதாநாயகியின் அம்மாவாக வரும் கல்யாணி நடராஜன், நாயகியின் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விஷ்வாவாக வரும் ஆன்சன், பேபி ரக்சா உள்ளிட்டவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் கனமறிந்து கலக்கலாக நடித்திருக்கிறார்கள்.


அனிருத்தின் இசையில் "போற போக்குல ஒரு லுக்க விட்டு என்ன செஞ்சிட்டாளே...", "வாடியேன் தமிழ்செல்வி....", "காவியா ஓவியா..." உள்ளிட்ட பாடல்கள் ரம்மியம், ரசனை. ஹம்மிங் செய்யத் தூண்டும் ரக, ராகம் என சொல்லத்தான் ஆசை.


கின்னஸ் சாதனையாளர் ரெசூல் பூக்குட்டி, சிவகார்த்திகேயனின் குரலை அழகான பெண் குரலாக மிகவும் நேர்த்தியாக தனது ஒலி வடிவமைப்பில் மாற்றியிருக்கிறார். சி.ஜி உதவியுடன் டி.முத்துராஜின் லவ் எபிசோட் செட்டுகள் அருமையாகவும், பிரம்மாண்டமாகவும் மிளிர்ந்திருக்கிறது. பி.சி.ஸ்ரீராமின் ஒவியப்பதிவு ,ஒளிப்பதிவு படத்திற்கு, வலு சேர்த்து இருக்கிறது.


வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பார்த்து நாயகருக்கு காதல் வருவது, அவரை கவிழ்க்க பெண் வேடம் போடுவது... என மிகவும் பழைய பாணியில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், ஒவ்வொரு காட்சியையும் காட்சிப்படுத்தியிருந்தாலும்., அவை ரசிகனை படுத்தவிடாமல் பார்த்துக் கொள்கிறது பி.சி.ஸ்ரீராமின், அழகான கேமிரா என்பது ஆறுதல்.


"இங்க லவ்வுன்னா உயிரை எடுக்கிற பசங்களும் இருக்காங்க... உயிரை கொடுத்து லவ் பண்ற பசங்களும் இருக்கங்க... " என்பது உள்ளிட்ட வசனங்களையும், சிவகார்த்தியின் லேடி கெட்-அப்பையும் நம்பி இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை சற்றே காமெடியாக "அவ்வை சண்முகி" டைப்பில் படமாக்க முயற்சித்திருக்கிறார்... என்பது குறை. மற்றபடி, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த நாயகர் காதலுக்காகவும், காதலிக்காகவும் அவ்வளவு செலவு செய்வது உள்ளிட்ட லாஜிக் மீறல்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்., ரெமோ வுக்கு, அழகான பெண்கள் எல்லாம்., குறிப்பாக சில நடிகைகள்... தங்களுக்கு சிவகார்த்தி., போட்டியாக வந்து விட்டார்... என அவருக்கு., கொடுக்கலாம் மெமோ.


மொத்தத்தில், "ரெமோ - ஏற்கனவே, வேறு சில நாயகர்கள் நடித்து, பார்த்து சலித்த டிராமா என்ற அளவிலேயே இருக்கிறது!"
-------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்
சிவகார்த்திகேயனின் லவ் மேஜிக்தான் ரெமோ. நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு மாதத்தில் திருமணம் நடக்கவிருக்கும் பெண்ணை, பத்தே நாளில் காதலித்து, கைப்பிடிக்கும் மேஜிக் அது.

ஹீரோ ஆகவேண்டும் என்று கே.எஸ். ரவிக்குமாரிடம் நர்ஸ் வேஷம் போட்டு சான்ஸ் கேட்டு செல்லும் சிவகார்த்திகேயன், பஸ்ஸில் கீர்த்தி சுரேஷை சந்திக்க, அவர் டாக்டராக இருக்கும் மருத்துவமனையில் நர்ஸாகவே தொடர்ந்து, தன் காதலை டெவலப் செய்வதுதான் கதையின் ஒரு பகுதி.

உண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உயர்ந்திருக்கிறார். அவருக்கே உரிய காமெடியும் கவுன்டர் தருவதும் டாப். நர்ஸ் வேடத்தில் ஹீரோயினை மிஞ்சி நடிக்கிறார். (ரசிகர் மன்றம் உறுதி).

கீர்த்தி சுரேஷூக்கு அழகும் காதலும் பெரிய ப்ளஸ். வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தியுள்ளார்.

சதீஷ் அடிக்கும் காமெடி சிரிக்க வைக்கிறது. மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சரண்யா ஆகியோரும் பொருத்தமான நடிப்பு.

பி.சி. ஸ்ரீராமின் அபாரமான ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி ப்ளஸ். அனிருத்தின் இசை ஓ.கே.

எல்லாம் இருந்தும் கதையும், திரைக்கதையும் பழைய படக்காட்சிகளை பார்க்கும் உணர்வைத் தருகிறது. வித்தியாமான, ஆச்சரியப்படுத்தும் திருப்பம் எதுவுமில்லாதது சப். பெண்களால் அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுவதை எத்தனை படங்களில்தான் காட்டுவீர்கள்? சிவகார்த்திகேயினன் நடிப்பும் காமெடியும் பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் மட்டுமே ரெமோவுக்கு உயிர் தந்திருக்கிறது.


ரெமோ: காதல் போதை

குமுதம் ரேட்டிங் : ஓகே


-----------------------------------------------


கல்கி சினி விமர்சனம்
வீட்டில் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையை, தேமே என்று கட்டிக் கொள்ளத் தயாராக நிச்சயதார்த்த மோதிரமும் போட்டுக் கொண்டு மருத்துவராக வேலை பார்க்கிறார் கீர்த்தி சுரேஷ். சரிதான். ஆனால் இன்னொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணாயிருந்தாலும், தொடர்ந்து வற்புறுத்தி, மனத்தை கரைத்துக் காதலிக்கச் செய்கிறான் ஒரு விடலை. வழக்கம்போல அவனுக்கு வேலைவெட்டி எதுவும் கிடையாது. இது போன்ற படங்கள் வாயில் வெட்டும் சம்பவங்களை ஊக்குவிப்பதாகவே அமையும்.

காதல் தேவதை cupid என்பதைக்கூட க்யூப்பிட் என்று உச்சரிக்காமல் குபிட் என்று சொல்லி ஆரம்ப அசரீரி காட்சியில் கொலை செய்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் பெண் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அந்தக் காலத்தில் ஆண்களே ஸ்ரீபார்ட் ஏற்று மொத்த நாடகத்திலும் பட்டை கிளப்புவார்களாம். Why dont you try this Mr.S.K.?

பொதுவாகத் தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகிகளை அழகிகளாகவும் - அதே சமயத்தில் - லேசான அசடுகளாகவும் சித்தரிப்பதும் வழக்கம். இந்தப் படத்தில் ரோஸ் கலர் ஈறு தெரிய சிரிக்கும் தேன் சிலை கீர்த்தி சுரேஷை, அசமஞ்சத்தின் உச்சமாய்ச் சித்தரித்திருக்கிறார்கள். அதுவும் படத்தில் இவர் ஒரு மருத்துவராம்!

காய்ச்சலுக்குத் தெர்மா மீட்டர்கூட வைத்து பார்க்காத நர்ஸ், ஒர வேலையும் செய்யாமலேயே மருத்துவமனையில் காலத்தை ஓட்டுவது எப்படி? என்று யாரும் முந்திக் கொள்ளக்கூடாது என்று படத்திலேயே இன்னொரு பாத்திரம் கேட்பதாகக் காட்சி வைத்திருக்கிறார்கள். ஆனால், பதில்தான் இல்லை.

சரண்யா என்றாலே பாச லூஸு அம்மா என்றாகிவிட்டது. இதிலும் அதே! பி.சி. ஸ்ரீராமின் கேமராவும் அனிருத்தின் துள்ளல் இசைம் லாஜிக் இல்லாத படத்தில் நிறைய மேஜிக் செய்கினறன.

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் இருந்து பெண்ணைப் பிரிப்பதை எப்படி நியாயப்படுத்துவார்கள்? அட 40 வருடமாகப் பார்த்துத் தேய்ந்ததுதான். அந்த மாப்பிள்ளையை கெட்டவனாக! ப்ராப்ளம் சால்வட்! ஹையோ! ஹையோ!

ஒரு காட்சியில் வழுவழு வேக்சிங் முகத்தோடு மாடியில் எஸ்.கே. தோன்றுவார். கீழே இறங்கியதும் அவர் முகத்தில் மூன்று நாள் தாடி இருக்கும். மெடிக்கல் மிராக்கிள்!

நான் கடவுள் ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு நகைச்சுவைக் காட்சிகள் புன்னகைப் பூச்சு வைக்கின்றன. பச்சைப் புடைவையைத் தவிர்த்து பிங்க் புடைவையை நாயகி தேர்ந்தெடுப்பது நுணுக்கமான காட்சியமைப்பு.


ரெமோ - சுமார்!
திரையரங்கில் ஈரோடு ரசிகர்கள் ரெனால்ட் ரெர்சாரியோ, ஜெயவினோ மற்றும் சஞ்சித் கருத்து: மற்றவர்களுக்காகப் பெண்வேடம் போடாமல் தன் தேவைக்காகவே பெண்ணாக மாறியிருக்கிறார் எஸ்.கே.படம், பார்க்கலாம்.வாசகர் கருத்து (20)

Ramkumar - Tiruvarur  ( Posted via: Dinamalar Android App )
28 அக், 2016 - 21:01 Report Abuse
Ramkumar மொக்க படம். மோசமான நிகழ்ச்சி பதிவுகள். சுவாதி ராம்குமார் காதலை கூட சரி எண்பது போன்ற கருத்துகள். உருப்படா படம்
Rate this:
A R J U N - ,இந்தியா
18 அக், 2016 - 09:08 Report Abuse
A R J U N CAB டிக்கெட்,நேரம் எல்லாம் தெண்டம்..ரொம்ப எதிர் பார்ப்போட போனதில் அய்யோடா சாமி..
Rate this:
parani - yishun,சிங்கப்பூர்
16 அக், 2016 - 03:46 Report Abuse
parani ஓவர் தலைகனம் உடம்புக்கு ஆகாது ......உன் தங்கச்சிக்கு நிச்சயம் பண்ணு நான் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணுறேன்......பாடாவதி ..........
Rate this:
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
12 அக், 2016 - 11:27 Report Abuse
Velayutharaja Raja Arranged marriageah vida love marriage panrathutha nallathunu misguide panranga..ponnungala convince panrathavida confuse panrathu easynu solli tharanga..mothathula oneside romeyosku rompa nalla teach panran intha remo..nadu uruppattirum...
Rate this:
Koundan - chennai,இந்தியா
11 அக், 2016 - 20:53 Report Abuse
Koundan mokka
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in