சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி, சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கும் தனது 24வது படத்தில் நடிக்க போகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் விநாயக் சந்திரசேகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஒரு சிறந்த பரிசு வழங்கி உள்ளார் சிவகார்த்திகேயன். அது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார் விநாயக் சந்திரசேகரன். அந்த பதிவில், வாழ்த்துக்கள் மற்றும் நீங்கள் கொடுத்த பரிசுக்கும் மிக்க நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா. இந்த ஆண்டு எனது பிறந்த நாளை இது மிகவும் சிறப்பாக்கி இருக்கிறது என்று பதிவு போட்டு உள்ளார் விநாயக் சந்திரசேகரன்.