முன்னாள் இராணுவ அதிகாரியான நாயகன் அல்லு அர்ஜுன் தன் குடும்பத்துடன் இருப்பதற்காக தனது சொந்த ஊருக்கு வருகின்றார். இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் இருக்கும் அல்லு அர்ஜுன் ஒரு நாள் அந்த கிராமத்தையும் ராகுல் ப்ரீத்தி சிங்கையும் ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறார்.
முதலமைச்சரின் மகன் ஆதியால் தான் ப்ரீத்திக்கு இந்த பிரச்சனை என்று தெரியாமலே காப்பாற்றுகிறார். இதனால் கொத்திப்படையும் ஆதி பழிவாங்க நினைக்கிறார். இதன் ஊடே அல்லு அர்ஜுன் மற்றும் கேத்ரின் திரைஷாவிற்கு இடையே திருமணம் ஏற்பட இருக்கிறது. இதில் ஆதி எப்படி பழிவாங்கினார் அல்லு அர்ஜுன் எப்படி சமாளித்தார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
அல்லு அர்ஜுனை சற்றே மாறுபட்ட கதாபாத்திரத்தில் காட்டியதற்காக இப்படத்தின் இயக்குனர் பொய்யப்படி ஸ்ரீனுவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும் அல்லு அர்ஜுன் முதல் காட்சி முதலே தன் நடிப்பாளுமையால் கவர்கிறார். இது வரை தனக்கிருந்த சாக்லேட் பாய் இமேஜை, இதில் உடைத்து கோபக்கார இளைஞனாக வலம் வருகிறார் அல்லு அர்ஜுன்.
பல தமிழ் படங்களில் நாம் பார்த்து பழக்கப்பட்ட ஹீரோ ஆதி, அக்கட தேசத்தில் வில்லனாக என்ட்ரி கொடுத்துள்ளார், அல்லு-க்கு சரி சமமாக இருக்கிறார். இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் அருமை. முதல் பாதி பொழுதுபோக்காக செல்கிறது அதுவும் இடைவேளை சண்டை காட்சிகள் கட்சிதம். மேலும் படத்தில் நடித்த அனைவரும் நன்றாக தங்கள் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் கதைதான் பலவீனமாக இருக்கிறது. இன்னும் திரைக்கதையில் மெனக்கெட்டு இருக்கலாம். அநாயசமாக செல்லும் முதல் பாதியும் முடித்தே ஆகவேண்டுமே என இரண்டாம் பாதியும் செல்கிறது. கட்டாயத்தின் பெயரிலேயே அல்லு அர்ஜுன் - ப்ரீத்தியுடன் சேருவதாக முடிகிறது கதை.
வழக்கம் போல அட்டகாசமாக ஆடியிருக்கிறார் அர்ஜுன், பாடல் காட்சிகளை மிக அழகாக ஒளிப்பதிவு செய்த ரிஷியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஸ்லோ மோஷன் யுக்தியை படத்தொகுப்பாளர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் அதுவும் சண்டைக்காட்சிகளை தொகுத்த விதத்தில் ரசிகர்களை கட்டிப்போடுகிறார்.
கதாபாத்திர தேர்விலும் காட்டிய வித்தியாசம் படத்திற்கு ஒரு புது மனம் தருகிறது. திரைக்கதையை மட்டும் சற்று கவனித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மொத்தமாக சரைய்னோடு அல்லு அர்ஜுன் மற்றும் ஆதியின் திரை ஆளுமையில் ஆக்ஷன் படமாக ரசிக்க வைக்கிறது.
சரைய்னோடு - ஆக்ஷன் அவதராம்