Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கபூர் அண்ட் சன்ஸ் (ஹிந்தி)

கபூர் அண்ட் சன்ஸ் (ஹிந்தி),Kapoor and sons
  • கபூர் அண்ட் சன்ஸ் (ஹிந்தி)
  • இயக்குனர்:
19 மார், 2016 - 17:04 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கபூர் அண்ட் சன்ஸ் (ஹிந்தி)

நடிகர்கள் : பவாத்கான், சித்தார்த் மல்கோத்ரா, ஆலியாபட், ரிஷி கபூர்

இயக்கம் : சகுன் பத்ரா

தயாரிப்பு : கரண் ஜோகர் மற்றும் அபூர்வா மேக்தா


குடும்ப உறவுகள் எந்தளவுக்கு முக்கியம் எனும் மேலான கருத்தை சொல்லி வெளிவந்திருக்கும் குடும்ப படம் தான் 'கபூர் அண்ட் சன்ஸ்'. பவாத்கான், சித்தார்த் மல்கோத்ரா, ஆலியாபட், ரிஷி கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள 'கபூர் அண்ட் சன்ஸ்' ரசிகர்கள் எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...


கதைப்படி, 90வயதை கடந்த அமர்ஜீத் கபூர் எனும் ரிஷி கபூரின் குடும்பம் பெரியது. இவரது பேரன்களில் ஒருவரான ராகுல் எனும் பவாத் கான், லண்டனில் பிரபல எழுத்தாளராக இருக்கிறார். மற்றொருவர் சித்தார்த் மல்கோத்ரா நியூ ஜெர்சியில் வேலை பார்க்கிறார். பவாத்துக்கும், சித்தார்த்துக்கும் ஆகாது. எப்போதும் ஒருவருக்கு ஒருவர் முறைத்து கொண்டு திரிவார்கள். தாத்தா ரிஷி கபூருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட, இருவரும் தங்களது ஊர்களில் இருந்து சொந்த ஊரான குன்னூருக்கு திரும்புகின்றனர். இங்கு வந்தும் பவாத், சித்தார்த்தின் மோதல் தொடர்கிறது. இந்த நேரத்தில் இவர்களது வாழ்க்கைக்குள் டியா எனும் ஆலியா பட் வருகிறார். ஆலியா வந்த பின்னர் இவர்களுக்கு இடையேயான மோதல் வலுக்கிறது. ஏற்கனவே பவாத், சித்தார்த்தின் பெற்றோர்களும் முறைத்து கொண்டு திரிகிறார்கள். இந்த ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்ததா.?, இல்லை பிரச்னைகள் இன்னும் பெரிதாய்...? ஒட்டு மொத்தமாக பிரிந்தார்களா.? என்பது தான் 'கபூர் அண்ட் சன்ஸ்' படத்தின் அழகிய குடும்பபாங்கான மீதிக்கதை!


சித்தார்த் மல்கோத்ரா, பவாத் கான் இருவரை காட்டிலும் 90வயது தாத்தாவாக வரும் ரிஷி கபூர் தான் அனைவரையும் கவருகிறார். அவர் செய்யும் குறும்புதனங்கள் தொடங்கி, உருக்கமான நடிப்பு வரை பக்காவாக நடித்திருக்கிறார்.


பவாத் கானின் நடிப்பு நன்றாக இருக்கிறது. சித்தார்த்தின் நடிப்பு சுமார் தான். ஆலியாவின் நடிப்பும் ஓ.கே. என்ற அளவில் தான் இருக்கிறது. ஏனென்றால் தொடர்ந்து ஒரே மாதிரியாக நடிப்பதால் ரசிகர்களை சலிப்படைய செய்கிறது.


படத்தின் இயக்குநர் சகுன் பத்ரா. ஒரு குடும்ப கதையை வித்தியாசமான முறையில் தந்திருக்கிறார். படத்தில் இடையிடையே வரும் டுவிஸ்ட்கள் சிறப்பு. படத்தின் முதல்பாகம் கலகல என செல்கிறது. இரண்டாம் பாகம் உணர்வுப்பூர்வமாக செல்கிறது. அதேசமயம் இரண்டாம் மெதுவாக நகருவது படத்திற்கு சற்று பலவீனம். இருந்தாலும் குடும்ப உறவுகள் கதையை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.


குன்னூரை அழகாக படமாக்கியிருக்கும் ஜெப்ரியின் அழகிய ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.


குடும்பத்து உறவுகளின் மதிப்பை ஒவ்வொரு குடும்பத்தாரும் உணர வேண்டும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள் என்பதை புரிய வேண்டும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறது 'இந்த கபூர் அண்ட் சன்ஸ்'.


மொத்தத்தில், 'கபூர் அண்ட் சன்ஸ் - அழகிய தேன்கூடு'

ரேட்டிங் - 3/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in