Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கோடை மழை

கோடை மழை,Kodai Mazhai
 • கோடை மழை
 • நடிகர்: கண்ணன்
 • இயக்குனர்: கதிரவன்
18 மார், 2016 - 10:07 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கோடை மழை

களவாடுவதையே தொழிலாக கொண்ட ஒரு கிராமத்தில் பிறந்த இளைஞன், களவாடுவதை பிடிக்காது இந்திய இராணுவத்தில் சேர்ந்து எல்லையில் பணியில் இருக்கிறான். இரு வேறு பருவ காலங்களில் சொந்த ஊருக்கு வரும் அவனது, (காவல் துறை அதிகாரியின் தங்கையுடனான )காதலும், களவு நண்பரின், நட்பும் தான் "கோடை மழை படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம். நண்பரின் களவால் அது கலைந்து போனதா.? கைகூடியதா..? என்பது கோடை மழை படத்தின் பதபதைக்க வைக்கும் க்ளைமாக்ஸ்!


மிடுக்கான மிலிட்டரி வீரராக புதுமுகம் கண்ணன் பாந்தம். கொஞ்சம் நடிகர் மிர்ச்சி செந்தில் சாயலில் இருக்கும் கண்ணனுக்கு காதலும், கடமை உணர்வும் ஒருசேர நடிப்பில் வருகிறது... வாழ்த்துக்கள்.


போலீஸ்காரர் வீட்டில் மிலிட்டரி இளைஞர் பெண் கேட்க தயக்கம் ஏன்.?. (அதுவும் கட்டிக் கொள்ளும் முறை இருந்தும்...) என்பதற்கு ஹீரோ அல்ல... என்பது புதிர்.


கிராமத்து கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா ., காவல் துறை அண்ணனின் பாசத்திலும் , இராணுவ காதலனின் நேசத்திலும் நெக்குருக வைக்கிறார். ஆனால் க்ளைமாக்ஸில் அம்மணிக்கு ஏற்படும் முடிவு அந்தோ பரிதாபம்.


முறைப்பான , விறைப்பான போலீஸ் அதிகாரியாக மு.கௗஞ்சியம். ஒவர் முறைப்பு காட்டியி ருக்கிறார். அது மட்டும் நெருடலாய் இருக்கிறது. இமான் அண்ணாச்சி இந்தப் படத்தில் தான் கடிக்காமல்., சும்மா சும்மா , காமெடி ,கரண்ட் போன கா மெடி , புள்ளைத்தாச்சி காமெடி தண்ணி அடிச்சுட்டு வண்டி ஒட்டுறதே தப்பு வாழ்க்கை ஒட்டுறது எவ்வளவு தப்ப? உள்ளிட்டஅர்த்தப்புஸ்டி காமெடிகள் செய்து அசரடித்திருக்கிறார். பலே! தவசியின் நடிப்பும் நச்.


சாம்பசிவத்தின் இசையில் நெல்லைச் சீமையிலே .. வந்து பொறந் தியே. நெல்லு மணி ..., பட்டாளராசா வே ... பட்டத்து ராசாவே... உள்ளிட்ட இப்படபாடல்களும் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு ... , பொத்தி வச்சிக்கோ .. உந்தன் அன்பு மனத ... உள்ளிட்ட சிச்சுவேஷனுக்கு ஏற்ற பழைய பாடல்களும் வாசம் ... ஹாசம்! டி.எஸ்.ஜாயின் பலமான படத்தொகுப்பிலும்., கே.சுரேஷ்குமார் , டி.அலெக்ஸாண்டர் இருவரது தயாரிப்பில் யாழ் தமிழ் திரை பேனரில் கதிரவனின் எழுத்து , இயக்கத்தில் அழகாக பெய்திருக்கிறது கோடை மழை.


கிரிக்கெட் - டோர்னமெண்ட் டோர் வரை போய் தோத்துப் போயிட்டீயே..., "என்னை விட எவனோ ஒருத்தன் முக்கியமுன்னு அன்னைக்கு இந்த வெள்ளத்துரை உயிரோடு இல்லன்ன் அர்த்தம்... , ஒரு போர்வைக்குள் 2 பேரும் தூங்கணும் போல் இருக்கு.., ஒருத்தன் கெட்டவனா இருக்கும் போது கூட இருப்பது தப்பு, அவன் திருந்திய போது விலகி இருப்து ரொம்ப தப்பு... , உள்ளிட்ட கருத்தாழம் மிக்க டயலாக்குகள், படம் முழுக்க பரவி, விரவிக் கிடக்கும் நெல்லை தமிழ், கிரிக்கெட்டுக்கு பதில், கபடி போட்டி எனச் சொல்லி நாயகர், இன்ஸ் வீட்டுக்கு, டொனேஷன் கேட்டு காதலியை பார்க்க செல்வது, மூச்சுபிடிப்பு பாட்டி வைத்தியம்... உள்ளிட்டவைகளில் கவனம் ஈர்க்கும் இயக்குனர் கதிரவன்., கிராமத்தில், இலவச பஸ்பாஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்காக அரசு பஸ் நிறுத்தாமல் போவது மாதிரி பிரைவேட் பஸ் காரணமே இல்லாது நிறுத்தாதுபோகும் சீன் வைத்திருப்பதில் வழுக்கியிருக்கிறார்.


ஆனாலும், நாயகர் நிலாவிலும், நாயகி சூரியனிடமும் தங்கள் துணையை காண்பது.... உள்ளிட்ட காட்சிகளிலும், இந்த ஜென்மத்துல் நீ தாண்டி என் பெண்ண்டி , ஒரு யுகம் ஒரு நாள் ஆனாலும் சரி... உன்னோடு வாழ்ந்துட்டு மலையில இருந்து விழந்தோ., மருந்து குடிச்சோ ... செத்துடலாம் ... உள்ளிட்ட வசனங்களிலும் வாடைகாற்றாய் வருடுகிறார். வாவ்!


ஆகவே, கோடை மழை - குதூகல மழை!"வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in