2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்று பிரபலமாகியுள்ளார் சரவண விக்ரமன். அவர் தற்போது பிக்பாஸ் சீசன் 7ல் என்ட்ரியாகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக கடைசிநாள் ஷூட்டிங்கை முடித்து பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியான சரவண விக்ரமன் தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த வாய்ப்பு நான் ரொம்ப நாள் எதிர்பார்த்தது தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போலவே எனக்கு இதுவும் பெரிய ஆபர். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனுக்கு எப்படி சப்போர்ட் கொடுப்பீர்களோ, அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரவணனுக்கு சப்போர்ட் கொடுங்கள்' என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து அதிகமானோர் தங்களுடைய வாழ்த்துகளை சரவணனுக்கு தெரிவித்து வருகின்றனர்.