2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் நடுவர்களாக இருந்து நடத்தி வந்த நிகழ்ச்சி 'கதாநாயகி'. கதாநாயகிகளைச் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த பல இளம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 8 முன்னணி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இரட்டை சகோதரிகளான ரூபினா மற்றும் ரூபிசீனா ஆகியோர் தொடக்கத்திகத்தில் இருந்தே கவனம் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று நடந்தது. இதில் எல்லோரும் எதிர்பார்த்தபடியே ரூபினா, ரூபிசீனா சகோதரிகள் கதாநாயகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசு தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலின் மூலம் பிரபலமான நடிகர் சுவாமிநாதன் கதாநாயகனாக நடிக்கும் சீரியலில் ஜோடியாக நடிக்க இருக்கிறார். மற்றொருவருக்கும் விரைவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.