தினமலர் விமர்சனம்
நடிகர்- நாகார்ஜுனா
நடிகைகள் - லாவண்யா, ரம்யா கிருஷ்ணன்
இயக்குனர் - கல்யாண் கிருஷ்ணன்
சுவரஸ்யமான படங்களில் நடித்துவரும் நாகர்ஜுனா இந்த முறை ஒரு ஃபேண்டஸி திரைப்படமான சொக்கடே சின்னி நயன படத்தில் நடித்திருக்கிறார். ஏக எதிர்பார்ப்புடன் வெளி வந்திருக்கும் இப்படத்தை பற்றி பார்ப்போம்.
இப்படத்தின் கதையானது ஆந்திராவின் ஒரு கிராமத்தில் வாழும் பங்கர ராஜு( நாகார்ஜுனா) என்பரின் குடும்பத்தை மையமாக கொண்டு சுழல்கிறது. பங்கர ராஜுவின் மகனின் காட்சியுடன் துவங்குகிறது. இதும் நாகார்ஜுனா தான். இவரும் இவரது மனைவியும் விவாகரத்து பெரும் முடிவோடு இருக்கிறார்கள்.
இருவரும் கிராமத்திற்கு சென்று பங்கர ராஜுவின் மனைவியான ரம்யா கிருஷ்ணனிடம் தங்கள் முடிவை சொல்கிறார்கள்.இதில் மனமுடையும் ரம்யா கிருஷ்ணன் ஒரு அறைக்குள் சென்று அங்கே இருக்கும் பங்கர ராஜு வின் பெரிய புகைப்படத்திடம். தனது நிலைமையையும் படும் அவஸ்தைகளையும் சொல்லி புலம்புகிறார். அவர் வந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று புலம்புகிறார். அப்புறம் என்ன இறந்தவர் எப்படி வந்தார்? பிரச்சனைகளை எப்படி தீர்த்தார் என்பது மீதிக்கதை.
நாகார்ஜுனாவின் வயது 55 என சொன்னால் யாராலும் நம்ப முடியாது, 30 வயது ஆள் போலவே இருக்கிறார். இருவேறு காதாபாத்திரத்தை அழகாக தனது நடிப்பால் வித்தியாசப்படுத்தி காட்டுகிறார். அடுத்ததாக படத்தின் பலம் என்ன என்று பார்த்தால் கதையின் பின் புலமாக வரும் குடும்பம். இதனால் எல்லாருமே ரசிக்கும் படியான காட்சிகளை அடுக்க முடிந்திருக்கிறது.
ரம்யா கிருஷ்ணன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார், வயதானாலும் அவரது நடிப்பு மாறவே இல்லை. முக்கிய வேடத்தை ஏற்றிருக்கும் அவர் அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.இது போக லாவன்யாவும் நடிப்பில் ஸ்கோர் செய்ய முயன்றிருக்கின்றார். இருந்தும் இவரின் நடிப்பு மேலே கூறிப்பிட்ட இருவரது நடிப்பால் கவனிக்கப்படாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.
அனைத்து கதாபாத்திரங்ளையும் அருமையாக வடிவமைத்து, அனைவரையும் அழகாக நடிக்க வைத்த இயக்குனரை அருமையாக பாராட்டியாக வேண்டும். ஏகப்பட்ட நட்சத்திரங்க்கள் இருந்த போதும் திறைமையாக கையாண்டிருக்கிறார். படத்தின் பலவீனம் என்று பார்த்தால் படத்தின் முக்கிய கதை இரண்டாம் பாதியில் துவங்குவதும் மெதுவான முதல் பாதியிம் தான். பாரபட்சம் பார்க்காமல் முதல் பாதியில் சில காட்சிகளை கத்தரித்திருந்தால் திரைக்கதை இன்னும் வேகமெடுத்திருக்கும்.
படத்தில் இசையும் ஒளிப்பதிவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட கதைக்கு நியாமன திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் அழகாக பதிவு செய்திருக்கிறார்.
சொக்கடே சின்னி நயன - பொருமையுடன் பார்த்தால் ரசிக்கலாம்.