Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா,Trisha illainna Nayanthara
புதியவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா.
24 செப், 2015 - 13:11 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா

தினமலர் விமர்சனம்


பிரபல இசையமைப்பாளரும், வளரும் இளம் நாயகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன், விடிவி.கணேஷ், யூகிசேது ரோபோ ஷங்கர்.. உள்ளிட்ட நடிகர்களோடு ஆர்யா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் கெஸ்ட் ரோலில் நடித்து வெளிவந்திருக்கும் ஏ சர்டிபிகேட் படம்தான் " த்ரிஷா இல்லனா நயன்தாரா"


கதைப்படி., ஒரே நாள், ஒரே மருத்துவமணையில் வெவ்வேறு தாய்மார்களுக்கு அடுத்தடுத்து பிறக்கும் பிள்ளைகள் முறையே.... ஜீவி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா மூவரும். ஒரே ஏரியாவாசிகளான மூவரும் பாலர் பள்ளி, தொடக்கபள்ளி, மேல் நிலைப்பள்ளி... என்று ஒன்றாகவே படித்து நட்போடு வளர, ஒரு கட்டத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு, மனிஷா மீதும் ஆனந்தி மீதும் ஒருசேர காதலும் வருகிறது. ஜீ.வி.பிரகாஷ் , மனிஷாவின் காதல் செக்சஸ் ஆனதா? அல்லது கயல் ஆனந்தி - ஜீ.வி.யின் காதல் கை கூடியதா ...? எனும் கதையை படு வல்கராகவும், படு கேவலமாகவும் சொல்லியிருக்கும் சமூக சீரழிவுகளுக்கு வித்திடக் கூடிய மோசமான "செக்ஸ் " படம் தான் த்ரிஷா இல்லனா நயன்தாரா மொத்த படமும் !!


ஜீ.வி.பிரகாஷ், "இந்த பூனையும் பால் குடிக்குமா? எனும் லுக்கில் இருந்து கொண்டு பல்லைக்காட்டியபடி அலைவது பார்க்க சகிக்கலை... "நான் வெர்ஜின் பையன் எனக்கு, வெர்ஜின் பொண்ணு தான்... வேண்டும் என ஜீ.வி.பிரகாஷ் தேடித் திரிவதும், அதைப் பார்த்து ஜீ.வி.யின் சித்தப்பா விடிவி.கணேஷ் நம்ம ஊர்ல டைனோசர்ஸ் காலத்தோட வெர்ஜின் பொண்ணுங்களும் போயாச்சு..." என போகிற போக்கில் போட்டுடைப்பதும் டூ - மச், த்ரி- மச் எல்லாம் அல்ல... பெண்கள் அமைப்புகள் எல்லாம் ஒன்று திரண்டு ஓர் அணியில் நின்று போராட வேண்டிய அளவிற்கு வல்கரான வசனங்கள்.


ஜீ.வி, விடிவி மட்டுமல்ல, கதாநாயகிகள் ஆனந்தியும் சரி., மனிஷாவும் சரி ... பேசும் டயலாக்குகளும் உவ்வே ரகங்கள் தான் என்றால் மிகையல்ல... உதாரணத்திற்கு ., ஆரம்ப காட்சியிலேயே ரம்யாவாக வரும் ஆனந்தி "எங்க அப்பா அடிச்சது போக மிச்சம் சரக்கு இந்த பிடி ... இத அடிச்சுட்டு உன் காதலை சொல்லாதே... செய்... என., பாதி சரக்கோடு ஒரு புல் ரம் பாட்டிலை இராத்திரி ஒரு மணிக்கு நீட்டுவதும்., அதை மிக்சிங் இல்லாமல் தயங்கி தயங்கி குடிக்கும் ஜீ.வி.க்கு தன்னையே சைடீஸாக தர சம்மதிப்பதில் தொடங்கி, க்ளைமாக்ஸில் நான் ஒரே ஒரு தடவ ஆர்யா கூட தப்பு பண்ணிட்டேன்... இனி உன்னோடு வாழுறேன்.. என உருகுவது வரை.. ஆனந்தி சம்பந்தபட்ட சீன்கள் தான் கொடுமை என்றால்., கதைப்படி, மொடாக் குடிகாரியான மனிஷா யாதவ், ஆனந்தியையும் தாண்டி. , ஒரு காட்சியில் தோழியிடம் "அவனை நான் தான் குரூப் ஸ்டெடின்னு மேட்டர் பண்ண வரச் சொன்னேன்... ஆனா, அவன் குடிச்சிட்டு வந்திருக்கான்., குடிச்சா பசங்க நோ எண்ட்ரியில வண்டிய ஸ்பீடா ஒட்டு வானுங்க ... நமக்கு ஒத்து வராது ... என உளறி கொட்டுவது உள்ளிட்ட ஆபாச அபத்தங்கள் இந்த படத்திற்கு ஏ அல்ல எந்த சான்றிதழுமே சென்ஸார் தந்திருக்க கூடாது... எனும் எண்ணம் ஏற்படுத்துகிறது


ஜீ.வி. பிரகாஷ், விடிவி.கணேஷ், மனிஷா, ஆனந்தி மாதிரியே ஆன்டியாக வரும் சிம்ரன், அவரது அல்ட்ரா மார்டன் கணவராக வரும் யூகி சேது , லொள்ளுசபா மனோகர் உள்ளிட்டவர்களும் படம் முழுக்க பச்சை பச்சையாக பேசி இப்படத்தை திட்டமிட்டு நீலப்படமாக்க முயற்சித்து, அதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். அதிலும் அட்வைஸ் தர்ற இந்த ஆன்ட்டிக்கே அப்ளிக்கேஷன் போட்டுடாதே...? எனும் சிம்ரனின் அலட்டலும், பொண்ணுங்ககிட்ட இப்போல்லாம் மனச திறந்து வச்சிக்கிட்டு போறதைவிட, பேன்ட் ஜீப்பை திறந்துவச்சுகிட்டு போனா மடிஞ்சிடுவாளுக... எனும் விடிவி.கணேஷ் இருவரும் பாவம் கொடுரன் டைப் ஆட்கள்.


விடிவியை ஜீ.வி யின சித்தப் பாவாக சித்தரித்து சில்லறைத் தனமான செயல்களிலும், கேவலமான அட்வைஸ் தரவிட்டிருப்பதிலும் ஈடுபடுத்தி சித்தப்பா எனும் சிறந்த உறவையும் இது மாதிரி சினிமாவில் கொச்சைப்படுத்தி இருப்பதை காட்டிலும் ஏற்கனவே கொச்சையாக்கப்பட்ட மாமா உறவில் விடிவியை சித்தரித்திருந்தாலாவது புண்ணியமாய் போயிருக்கும்... இப்படி ஒரு படு பாதக படம் எடுத்த இயக்குனருக்கு!!


மஞ்சள் பத்திரிகை சமாச்சாரங்கள், பச்சை, பச்சை வசனங்கள் என கிட்டத்தட்ட முழு நீள நீலப்படமாக ஆதிக் இரவிச்சந்திரனின் இயக்கத்தில் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் தெரிந்தாலும் ஜீ.வி.பிரகாஷின் அதிரும் இசை, ரிச்சர்டு. எம். நாதனின் அழகிய ஒளிப்பதிவு, ஆண்டனி எல்.ருபனின் நறுக்கு தெறித்தார் போன்ற நச் என்ற படத்தொகுப்பு உள்ளிட்டவை இப்படத்திற்கு பெரும் ப்ளஸ் பாயிண்ட்டுகள்!


ஆனாலும் சித்தப்பா உறவையும் கொச்சைபடுத்தி, இன்றைய இளம் ஆண், பெண் சமூகத்தையும் கொச்சைபடுத்தி இச்சையை எக்கச்சக்கமாய் தூண்டும் விதத்தில், ஆதிக் இரவிச்சந்திரனின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும், திரிஷா இல்லனா நயன்தாரா - லவ் இல்லனா செம மேட்டர் படம்ண்ணா !!."


-------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
'இவள் இல்லைன்னா இன்னொருத்தி!' என்று காதலில் தோற்ற இளைஞர்களுக்கு ஆறுதலாக பல பலான விஷயங்களோடு சொல்லித்தரும் படம்.


ஜி.வி பிரகாஷ் முதலில் கயல் ஆனந்தியை லவ்வுகிறார். கூடவே தப்பு செய்யவும் முயற்சிக்கிறார். இது பள்ளி முழுவதும் தெரியவர, காதல் டமால் ஆகிறது. உடனே மனிஷா யாதவ் வலிய வந்து காதலிக்கிறார். மனிஷா நிறைய சரக்கடிக்கிறார். அட்வைஸ் பண்ணப்போய் இவர்கள் காதலும் டமால் ஆகிறது.


சோகத்தை மறைக்க சித்தப்பா விடிவி கணேஷ் ஒயின்ஷாப் வைத்திருக்கும் கும்பகோணம் போய் குடிக்கிறார். அங்கே முன்னாள் காதலி கயல் ஆனந்தியை சந்திக்கிறார். விடிவி கணேஷின் ஆலோசனையில் ஆன்ட்டி சிம்ரன் உதவியுடன் ஆனந்தியை மீண்டும் லவ்வுகிறார். கிளைமாக்ஸில், ஆனந்தி, சூர்யாவுடன் ஒரே ஒரு நாள் மேட்டர் வைத்துக் கொண்டதாக சொல்ல, காதல் கந்தலாகிறது.


ஜி.வி. பிரகாஷ் நடிப்பு, டான்ஸ், வசனம் என்று இளைஞர்களை நிறையவே கை தட்ட வைக்கிறார். பாடல்களில் ஆட்டம் போட வைக்கிறார்.


முதல் நாயகி கயல் ஆனந்தி கண்களால் காதல் பேசி கவர்கிறார். சரக்கடிச்சாதாண்டா பசங்களுக்கு தைரியம் வரும் என்ற புனிதமான வசனங்கள் எல்லாம் பேசி கிறங்கடிக்கிறார்


நடிக்கவும் செய்கிறார் மனிஷா யாதவ், கவர்ச்சி கலக்கல். ஆண்கள் சரக்கடித்துவிட்டு தன்னிடம் தப்பு செய்ய கூடாது என்பதை இவர் கூறும் விளக்கத்தால் தியேட்டரில் விசில் பறக்கிறது.


இன்றைய ஆண் - பெண் இளைஞ்களின் மனநிலையை புட்டுப்புட்டு வைக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இளைஞர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு கூடுதலாக பலான விஷயங்களை சேர்த்து விருந்தே கொடுத்திருக்கிறார். படத்தில் எங்கேயும் ஆடை அவிழ்ப்புக் காட்சிகள் இல்லை. ஆனால் வசனங்களால் எல்லாத்தையும் அவிழ்த்துப் போட்டு விடுகிறார்கள்.


தி.இ.ந. : காதல் - சரக்கு - மேட்டர் கலந்த கலவை.


குமுதம் ரேட்டிங்: அபத்தம்வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in