Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நான்-ஸ்டாப் (ஹாலிவுட்)

நான்-ஸ்டாப் (ஹாலிவுட்),Non Stop (Hollywood)
  • நான்-ஸ்டாப் (ஹாலிவுட்)
  • நடிகர்: லியம் நீசன்
  • ..
  • இயக்குனர்: ஜாம் கொல்லெட் செர்ரா
20 மார், 2014 - 12:48 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நான்-ஸ்டாப் (ஹாலிவுட்)

தினமலர் விமர்சனம்



கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக மலேசியா - கோலாலம்பூரில் இருந்து சீனா - பீஜிங்கிற்கு, இருநூற்று சொச்சம் பயணிகளுடன் கிளம்பிய போயிங் விமானத்தை காணாமல் உலகமே வியப்புடன் தேடிக்கொண்டிருக்கும் சூழலில், இந்தியா முழுக்க ஆங்கிலத்திலும், தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் வெளிவந்திருகு்கும் விமான கடத்தல் பற்றிய த்ரிலிங்கான ஹாலிவுட் படம் தான் 'நான்-ஸ்டாப்'.


ஹாலிவுட் ஹீரோ லியம் நீசன் நடிக்க, ஸ்பானிஷ் இயக்குநர் ஜாம் கொல்லெட் செர்ரா இயக்கத்தில், பிரெஞ்சு -அமெரிக்க படமாக, ஐம்பது மில்லியன் டாலர் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக இங்கு இப்பொழுது வெளிவந்திருக்கும் 'நான்ஸ்டாப்', கடந்த ஜனவரி மாதமே பிரான்ஸிலும், பிப்ரவரி மாதம் அமெரிக்காவிலும் வெளியாகி இதுவரை எண்பது மில்லியன் டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்திருப்பதும் ஹைலைட்!


கதைப்படி, தன் எட்டு வயது மகளை கொடூர நோய்க்கு பலி கொடுத்துவிட்டு, அந்த சோகத்தில் குடிக்கு அடிமையாகி, அதனால் மனைவியின் விவகாரத்துக்கும் ஆளாகி, நியூயார்க் போலீஸ் பதவியிலிருந்தும் விலக்கப்பட்டு, ஒருவழியாக ரகசிய விமான பாதுகாப்பு அதிகாரி எனும் பதவியில், ஏர்மார்ஷல் அந்தஸ்த்துடன் நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு விமானத்தில், அவ்விமான ரகசிய பாதுகாப்பு அதிகாரியாக பறக்கிறார் பில்மார்க்ஸ் எனும் ஹீரோ லியம் நீசன்.


அட்லாண்டிக் கடலின் மத்தியில் 40 ஆயிரம் அடி உயரத்தில் நடு இரவில் பில்மார்க்ஸ்க்கு செல்போனில் ஒரு மெஸேஜ் வருகிறது. அதில் 150 மில்லியன் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கி கணக்கொன்றில் போட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அந்த பிளைட்டில் பயணிக்கும் ஒவ்வொருத்தரும் இருபது நிமிடத்திற்கு ஒருவராக கொல்லப்படுவார்கள் என்று மிரட்டும் அந்த மெஸேஜை பார்த்துவிட்டு ஆக்ஷ்னில் இறங்குகிறார் பில்மார்க்ஸ் எனும் ஹீரோ லியம் நீசன்! அந்த விமானத்தில் இருக்கும் ஒவ்வொருத்தரையும் சந்தேகப்படும் பில்மார்க்ஸ், விமான பணிப்பெண் மற்றும் தன் பக்கத்து இருக்கை பெண் உள்ளிட்டோர் உதவியுடன் நடக்க இருக்கும் கொலைகளை தடுத்தாரா? அல்லது தீவிரவாதிகளிடம் சிக்கி சின்னாபின்னமானாரா...? அல்லது அவரே தீவிரவாதியா...? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், படம் பார்க்கும் நாமே அந்த விமானத்தில் பயணிப்பது போன்ற திகிலுடன் இருக்கும் படம்தான் 'நான்-ஸ்டாப்!'


சமீபகாலமாக அனிமேஷன், கிராபிக்ஸ், வேற்றுகிரகவாசிகள், டைனோசர் மாதிரி ஜந்துக்கள்... என நம்பமுடியாத விஷயங்களில் படமெடுத்து நம்மை போரடித்த ஹாலிவுட் படங்களில் இருந்து சற்றே வித்தியாசமாக, நம்பும் படியான திரைக்கதை, ப்ளைட் ஹைஜாக், ஏர்மார்ஷல் ஹீரோ, பரந்து விரிந்த ஆகாயம், அதில் பறக்கும் விமானம்... என படம் பார்க்கும் நம்மையும், திகில் உலகத்திற்கு கடத்தி கொண்டு விமானத்தில்போய் திரும்புவது 'நான்-ஸ்டாப்' படத்தின் பெரிய ப்ளஸ்!


ஹீரோ லியம் நீசன் ஆகட்டும், அவருடன் இணைந்து நடிக்கும் மற்ற ஆண், பெண் நட்சத்திரங்கள் அத்தனைபேரும் ஆகட்டும் அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


ஹீரோ லியம் நீசனும், டைரக்டர் ஜாம்கொல்லெட் செல்ராவும் இணைந்து ஏற்கனவே 'அன்நோன்' எனம் மெகாஹிட் தந்தவர்கள். எனவே அந்தவரிசையில் இசை, ஒளிப்பதிவு, டெக்னிக்கல், டைரக்ஷ்ன் என எல்லாவற்றிலும் மிரட்டியிருக்கும் 'நான் ஸ்டாப்' மெய்யாலுமே 'நான் ஸ்டாப்' தான்!!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in