Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு (ஹாலிவுட்)

கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு (ஹாலிவுட்),Escape plan,
 • கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு (ஹாலிவுட்)
 • சில்வர்ஸ்டர் ஸ்டோலன், அர்னால்டு
 • ..
 • இயக்குனர்: மிக்கேல் ஹுஸ்டாம்
19 அக், 2013 - 10:03 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு (ஹாலிவுட்)

  நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.comஉலகில் இருக்கும் பல சிறைகளில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள ஓட்டைகளை, பலவீனங்களைப் பயன்படுத்தி கைதிகள் எப்படித்தப்பிக்கிறாங்க என்பதை உணர்ந்தவர் ஹீரோ . அவரோட வேலையே இந்த மாதிரி ஒரு ஜெயில்ல வாலண்டியரா உள்ளே போய் அங்கே இருந்து தப்பிச்சு அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள மைனஸ்களை அதிகாரிகளுக்குத்தெரியப்படுத்துவதே . அவரோட அனுபவங்களை ஒரு புக்காவே போட்டிருக்கார் .
 
ஜெயிலோட அமைப்பு எப்படி இருந்தா கைதி எந்த வழில தப்பிப்பான் என்பதற்கான கைடு அது . அந்த புக்கைப் படிச்சா சிறை அதிகாரிகள் ஜாக்கிரதையா இருப்பாங்க , கைதிகள் படிச்சா ஈசியா ஜெயில்ல இருந்து தப்பிப்பாங்க.

எந்த ஜெயிலோட அமைப்பைப் பார்த்தாலும் ஹீரோவால அந்த ஜெயில்ல இருந்து எப்படித்தப்பிக்கறதுன்னு பிளான் ரெடி பண்ணிக்கொடுக்க முடியும். அப்பேர்ப்பட்ட கில்லாடி ஆளான ஹீரோவுக்கு ஒரு பிராஜக்ட் வருது . உலகின் மிகப்பாதுகாப்பான ஒரு ஜெயில் உள்ளே போய் தப்பிச்சு வரனும் . அதுக்கான சார்ஜ் 5 மில்லியன் டாலர்கள் .

ஹீரோ அந்த ஜெயிலுக்குள்ளே போய் தப்பிக்க முனையும் போதுதான் தெரியுது , இது அவரை லைஃப் லாங்க் ஜெயில்லயே சிக்க வைக்க திட்டமிடப்பட்ட சதின்னு . அதை எப்படி அவர் முறியடிக்கறார்? அந்த சதி செஞ்ச சதி லீலாவதி யார் என்பதே மிச்ச மீதி திரைக்கதை . க்ளைமேக்ஸ் ல ஒரு சஸ்பென்ஸ் வேற இருக்கு.

ஹீரோவா சில்வர்ஸ்டர் ஸ்டோலன் . ஆள் பார்க்க பாவமா இருக்கார் . வயசானவங்க ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் நடிக்காம இருப்பதே அவர்களது இமேஜ்க்கு நல்லது. வ்ழக்கமா தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சட்டையைக்கழட்டி தன் எக்சசைஸ் பாடியைகாட்டி விடும் ஹாலிவுட் கமல் ஆன ஸ்டோலன் இதில் அப்படிச்செய்யாதது ஆறுதல். கன்னம் எல்லாம் சதை தொங்கிப்போச்சு.

இன்னொரு ஹீரோ கமாண்டோ அர்னால்டு ஸ்வார்செனேகர் . இவரும் அப்படியே. வள்ளி படத்தில் ரஜினியைப்பார்த்தது போல் வயசான கெட்டப்பில் இருக்கார் .ஹீரோவை விட இவருக்கு காட்சிகள் குறைவுதான் . ஆனால் க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் காட்சி இவருக்கு உரியது என்பதால் நடிக்க ஓக்கே சொல்லி இருப்பார் போல.

வில்லனாக வரும் ஜிம் மிக அமைதியான முகத்துடன் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வழங்கி மனம் கவர்கிறார் .

ஹீரோயின் பேருக்கு இருந்தாலும் நோ யூஸ் . திரைக்கதை முழுக்க முழுக்க ஜெயிலிலேயே நடப்பதால் ஹீரோக்கள் இருவரையுமே காட்ட வேண்டிய கட்டாயம்.

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

* ஓப்பனிங் சீனில் ஹீரோ ஒரு ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சி மிக பிரமாதமாகப் படம் ஆக்கிய லாவகம்.  யாரும் லாஜிக் மிஸ்டேக்கே சொல்லாத படி எடுத்தது. அதே சமயம் அதை டீட்டெயிலாக சொல்லி இழுக்காமல் கட் ஷாட்ஸ்களில் சொல்லி ஈசியாகப்புரிய வைத்தது.

* படம் மொத்தம் 2 மணி நேரம் ஓடுது. முழுக்க முழுக்க ஜெயிலில் தான் என்றாலும் சில காட்சிகள் தவிர மீதிக்காட்சிகளை போர் அடிக்காமல் ஒரு எதிர்பார்புடன் திரைக்கதை அமைத்த லாவகம்.

* இரண்டு ஹீரோக்கள் மெயினாக இருந்தாலும் வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை அண்டர் ப்ளே ஆக்டிங் செய்ய வைத்தது.

மனம் கவர்ந்த வசனங்கள்

* ஜெயில் லைஃப் எப்படி இருந்தது ?
எல்லாரும் உன்னைத்தான் அக்கறையா கேட்டாங்க

* தப்பிக்கக்கூடிய வாய்ப்பு எந்தக்கைதிக்கும் 1% கூட கிடைக்கக்கூடாது , அதுதான் என் லட்சியம்

* பொதுவா ஜெயில்ல இருந்து தப்பிக்க 3 காரணிகள்
1.  சுத்தி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கனும்
2.  வெளீல இருந்து உதவி கிடைக்கனும்
3.  சமயத்துக்கு தக்கபடி சாதுர்யமா நடக்கக்கத்துக்கனும்

* ஹாய் , ஸ்வீட்டி , உன் கள்ளத்தொடர்பு எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு ?
வாட்?
நான் ஜெயிலுக்குப்போனதும் ஒருத்தன் கூட டின்னருக்குப்போனியே ?

* ஹாய் , என் பேரு மிஸ் ஜூஸ்
புதுசா?
வாட்?
இல்லை , வேலைக்குச்சேர்ந்து புதுசா?ன்னு கேட்டேன் , நியூலி அப்பாயிண்ட்டட்?
5 மாசம்தான் ஆகுது
5 மாசமா? பார்த்தாத்தெரியலையே?

* ஜெயில்ல இருக்கும்போது பொழுது போக்குகள் ஏதும் இல்லைன்னா ரொம்ப போர் அடிக்கும்

* டாக்டர் , அந்தக்கைதி உங்க கிட்டே என்ன கேட்டான் ?
இங்கே இருக்கறவங்க எல்லாம் ஏன் பல்ஹீனமா இருக்காங்கன்னு கேட்டான்
அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க ?
இப்போ உன் கிட்டே சொன்ன மாதிரியே தெரியாதுன்னு சொன்னேன்


* சின்ன வயசுல நான் ஓவியன் ஆகனும்னு ஆசைப்பட்டேன் , இதுல என்ன பிரச்ச்னைன்னா எனக்கு அந்த திறமை சுத்தமாக்கிடையாது

* சிறையில் இருக்கும் மனிதர்களின் புத்தி வெளியுலக மனிதர்களின் புத்தியை விட வித்தியாசமா சிந்திக்கும்

* சாதாரணமா எல்லா ஜெயிலுங்களும் ஊரை விட்டுத்தள்ளி தான் இருக்கும்

* ஒருத்தனைக்கொல்வது சுலபம், அவனை திருத்தறதுதான் கஷ்டம் , இதுல வேடிக்கை என்னான்னா அதுதான் வாழ்க்கை ஆவது

* நீ சாகறதுக்கு ஆசைப்படறியா?
நீ ஜெயிலை விட்டு வெளீயே போக ஆசைப்படறியா?

* உனக்கு சுதந்திரத்தைத்தவிர வேறு எது வேணாலும் தர என்னால முடியும்

* நான் இங்கே வாழ்வதே கடவுளை ஒரு டைமாவது நேர்ல பார்த்துடலாம்னு தான்

* பொதுவா டாக்டர்ங்க வியாதியை குணப்படுத்த மருந்து தருவாங்களே தவிர அந்த மருந்தோட தன்மை என்ன?னு தெரிஞ்சு வெச்சுக்க மாட்டாங்க


சி பி கமெண்ட் - தியேட்டரில் போய்ப்பார்க்கும் அளவு பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது , ஆனா போர் அடிக்காம போகுது . 2 சூப்பர் ஸ்டார்கள் ரசிகர்களைத்திருப்திப்படுத்தும் அளவு ஆக்‌ஷன் காட்சிகள் ஏதும் கிடையாது திரைக்கதை சுவராஸ்யம் போதும் என நினைப்பவர்கள் பார்க்கலாம். பெண்களும் பார்க்கலாம்.வாசகர் கருத்து (1)

Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
19 அக், 2013 - 12:07 Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar இது தமிழருக்கு கட்டாயம் தேவையான படம். அநியாய பணம் கொழுத்தோர் செய்யும் வேலையால் பாதிக்கப்படுறது யாருங்க? நகைச்சுவை தெரியாத 'சந்தானத்தை' காமடி நடிகர் என்று பணத்தைக்கொடுத்து ஏதோ நடக்குது. மக்களும் ஆரவாரம் இல்லாமல் பார்த்து விட்டு போறார்கள். அது மட்டுமா? நவீன சரஸ்வதி சபதமாம் சென்சார் போட் என்ன செய்தோ தெரியவில்லை பெயரையும் கெடுத்து, சமயத்தையும் கெடுத்து, மக்களையும் திசையை மாற்றிக் கூட்டிப்போனால், எல்லோரும் மடையர்களா? சென்சர் போட் பெயரை மாற்றி இருக்க வேண்டும். 'தலைவாவுக்குப் பின்னர்' எல்லாம் போச்சு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in