Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஆப்டர் எர்த்(ஹாலிவுட்)

ஆப்டர் எர்த்(ஹாலிவுட்),After Earth (Hollywood)
  • ஆப்டர் எர்த்(ஹாலிவுட்)
  • நடிகர்: வில் ஸ்மித், ஜேடன் ஸ்மித்
  • ..
  • இயக்குனர்: மனோஜ் நைட் சியாமளன்
14 ஜூன், 2013 - 12:56 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஆப்டர் எர்த்(ஹாலிவுட்)

 

தினமலர் விமர்சனம்


மனோஜ் நைட் சியாமளனின், இந்திய தாக்கம் குறையாத, ‘ஹாலிவுட்’ படம். இரண்டே நடிகர்கள். சுவாரஸ்யம் ததும்பி வழியும் விஞ்ஞான புனைவு கதை.

பூமி, வாழத் தகுதியற்றதாக மாறியபிறகு, மனித இனம் குடியேறும் வேறொரு கிரகத்தில் வசிக்கிறார்கள் சைபர் ரெய்கும் (வில் ஸ்மித்), அவரது மகன் கிடாய் ரெய்கும் (ஜேடன் ஸ்மித்). தந்தை ஒரு விண்வெளி காவல் அதிகாரி. வேலை நிமித்தமாக அவர் அடிக்கடி வெளியில் இருப்பதும், மகன் தந்தைக்காக ஏங்குவதும்‌ ஆரம்பம். மூன்று நாட்கள் பூமியை கண்காணிக்கவும், மனிதர்களை அழிக்கும் ஒரு கொடூர மிருகத்தை, மீண்டும் பூமியிலேயே விடுவதற்கும், சைபர் கிளம்புகிறார். மகனின் ஏக்கத்தைப் போக்க, அவனையும் தன்னுடனே அழைத்துப் போகிறார். வழியில் விண்கற்கள் தாக்கி, விண்கலத்தின் வால் பகுதி துண்டாகி பறந்துபோகிறது. கலத்தில் உள்ள அனைவரும் இறக்க, சாகும்  தருவாயில் சைபர்! உதவிக்கு அழைக்க பயன்படும ‘பீக்கன்’  என்னும்‌ சிக்னல் கருவி, துண்டான வால் பகுதியில்! மகன் கிடாய், பூமியில் இறங்கி, மிருகங்களுடன் போராடி, பீக்கனை கண்டெடுத்து, சிக்னல் அனுப்பி, தந்தையை காப்பாற்றுவது க்ளைமாக்ஸ்.

ஒரு சிறுவனையும், அடிபட்ட தந்தையையும் வைத்துக்கொண்டு, அற்புதமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். புதிய கிரகத்தில்... கட்டிடங்கள் எல்லாம் முக்கோண வடிவத்தில் வானுயர இருப்பதும்‌, ராட்சத மீன்களாக விண்கலங்கள் பறப்பதும், கண்கள் விரிய வைக்கும் காட்சிகள். பீட்டர் சுசிட்ஸ்கீயின் கேமரா, அழகை சேதாரமில்லாமல் அள்ளி வந்திருக்கிறது. ஜேம்ஸ் நியூட்டன் ஹேவர்ட், இசையால் நம் இதயங்களை தடதடக்க வைக்கிறார். பருவ மாற்றத்திற்கேற்ப நிறம் மாறும் உடைகள், இருபக்கமும் கூர் கத்திகள் நீளும் வெள்ளி தடி, மணிக்கட்டிலேயே படம் தெரியும் விஞ்ஞானம் என, அதிகம் உழைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். ஜேடன் ஸ்மித் பட்டையை கிளப்பியிருக்கிறான். புதிய ஆபத்துகளைக் கண்டு பயந்து நடுங்குவதும், தந்தையின் வார்த்தைகளால் வீரம் கொள்வதுமான அட்டகாச நடிப்பு! விருதுகள் நிச்சயம், வாழ்த்துக்கள்!

மொத்தத்தில், "ஆப்டர் எர்த்" - "கில்லி"

ரசிகன் குரல் : இது புள்ள! என்னைக்காவது உங்கப்பனுக்கு ஒரு வாய் தண்ணி எடுத்து கொடுத்திருப்பியா?



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in