விமர்சனம்
அந்த குட்டிப் பையன் வயதுக்கு மீறிய உடலசைவுகளையும் வசனத்தையும் வெளிப்படுத்துவது படு செயற்கை போலீஸிடம் இருந்து தப்பிக்க படபடவென ஆங்கிலத்தில் பேசுவதும், அதற்கு அந்த போலீஸ்காரர் காட்டும் முக பாவனையும் ரசிக்க வைக்கிறது. அதேலோல இளநீர் திருடி மாட்டிக்கொண்டு தப்பித்து ஓடும் காட்சியில் இளநீர்க்காரருக்கே இளநீரை வெட்டிக்கொடுப்பதுமாக காட்சிகளை நகர்த்தியிருக்கும் விதம் ஊனமுற்ற வாலிபர் கேரக்டர் செம டச்சிங். மருத்துவமனையில் சேர்த்த பின்பு அவனுக்கு சிகிச்சையளித்த பெண் டாக்டரும் நொட்டிக்öõண்டே செல்வது விஷூவல் கவிதை.
தன் அம்மாவை அடிக்க கிளம்பிய மிஷ்கின். எதிர்பாராவிதமாக அந்த சிறுவனின் அம்மா நடத்தையை கண்டு செவிட்டில் அடிக்கும் காட்சியில் தியேட்டரில் செம கைத்தட்டல் . ஸ்னிக்தாவுக்காக நடக்கும் சண்டை. ஸ்னிக்தா பேசும் செயற்கையான வசனங்கள் எல்லாமே போர். மகேஷ் முத்துச்சுவாமியின் கேமரா தான் படத்துக்கு முக்கிய ஜீவன். ராஜாவின் பின்னணி இசையும். பாடல்களும் சிலிர்ப்பை ண்டு பண்ணுகிறது. வசனங்களே இல்லாமல் காட்சிகள் மூலம் கதை சொல்வதில் மிஷ்கின் நிறையவே மெனக்கெட்டிருப்பது புது முயற்சி. ஆனால் சராசரி ரசிகனின் சூழல், அவனின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல் தமிழர்கள் நடித்த ஜப்பானிய படம் போல இருப்பதால் சில இடங்களில் மனம் லயிக்கவில்லை என்பது நிஜம்.
நந்தலாலா - துன்பியல் கவிதை. குமுதம் ரேட்டிங் - ஓ.கே.
----------------------------
கல்கி விமர்சனம்
அம்மாவை அறைய வேண்டும் என்று மனநிலை முதிராத ஒருவனும், அம்மாவுக்கு முத்தம் தர வேண்டும் என்று பள்ளிச் சிறுவனும் அவரவர் அம்மாவைப் தேடிப் பயணமாவதுதான் கதை. (இருவரும் சிறுவயதில் அம்மாவைப் பிரிந்தவர்கள்) ஆனால், இருவருக்கும் காலம் அறை கொடுக்கிறது. என்பது க்ளைமாக்ஸ். அவர்கள் வழியில் சந்திக்கும் நபர்களின் தோள்களில் தொத்திக் கொண்டு பயணிக்கும் கதையில், நெகிழ்வும், கண்ணீரும், ரத்தமும், வெக்கையும் கலந்து வியாபிக்கின்றன. மனநிலை முதிராத பாஸ்கரமணி பாத்திரம் மிஷ்கினுக்கு என்றே உருவானதோ... அத்தனை கச்சிதம். சிறுவன் "அகியும் ஏக்கத்தை முகத்தில் துõக்கி அலைகளில் மனசுக்குள் என்னவோ பிசைகிறது! கூடவே தொற்றிக் கொள்கிற ஸ்னிக்தாவும் நடிக்கத் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
கதையின் மொத்தச் சுமையையும் தம் பின்னணி இசையால் இளைய ராஜா நீவிக் கொடுப்பதால் அத்தனை சுமையும் பார்வையாளர் மனத்துக்குள் இறங்கி விடுகிறது. "ஒண்ணுக்கொண்ணு துணை இருக்கு உலகத்துல பாடல் ஜேசுதாஸின் குரலில் ஒலிக்கையில் ராஜாவின் ராஜபாட்டை விரிகிறது! மகேஷ் முத்துசாமியின் கேமராவில் அத்தனை இயல்பு. ஆற்றின் போக்கில் நெளியும் நாணலைப் படம் பிடித்திருப்பது அட்சர லட்சம். ஆனால், காட்சிக்குக் காட்சி இத்தனை ஸ்லோ ஏன்...? உண்மையிலேயே பாஸ்கரமணி பாத்திரம் மனநிலை பிறழ்ந்ததா? "அகி அவன் அம்மாவைப் பார்ப்பதோடு கதை முடிந்துவிடுகிறதே. அப்புறம் ஏன் நீள்கிறது...? இதுபோன்ற கேள்விகள் தொக்கி நிற்கத்தான் செய்கின்றன.
நந்தலாலா - செல்லுலாய்டு கவிதை.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!