Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

லொள்ளு தாதா பராக் பராக்

லொள்ளு தாதா பராக் பராக்,Lollu Dada Parak Parak
  • லொள்ளு தாதா பராக் பராக்
  • மன்சூர் அலிகான்ž
  • ஷில்பா
  • இயக்குனர்: ஜெயக்குமார்
11 மார், 2013 - 17:25 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » லொள்ளு தாதா பராக் பராக்

தினமலர் விமர்சனம்


பிறரது பல படங்களில் வில்லன், லொள்ளன், காமெடியன்... என்று கல்லாகட்டினாலும் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தனது ராஜ் கென்னடி பட நிறுவனம் மூலம் ஒரு படத்தை தயாரித்து, அதில் கதாநாயகர் அவதாரமும் எடுப்பது மன்சூரலிகானின் ஸ்டைல்! அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் "லொள்ளு தாதா பராக் பராக்".

கதைப்படி மணி ஆண்டார் - மன்சூரலிகான் பலதரப்பட்டோருக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு, அதை அடியாட்கள் வைத்து வசூலிக்கும் தாதா. அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கிய பாண்டு அதை ஒழுங்காக திருப்பி கட்டாததால் அவரது மகள் தங்கத்தை(ஹீரோயின் ஷில்பா) சிறை எடுக்கும் மன்சூர், அவள் மீது காதல் வசப்படுகிறார். முதலில் தாதாவின் காதலை ஏற்க மறுக்கும் தங்கம் அலைஸ் ஷில்பா, இறுதியில் மன்சூரை மனிதராக மாற்றுவதும் காதலிப்பதும் தான் "லொள்ளு தாதா பராக் பராக்" படத்தின் மொத்த கதையும்!

மணி ஆண்டாராக மன்சூர் வழக்கம் போலவே பக்கம் பக்கமாக வசனம் பேசி வாயடிக்கிறார். வம்பு சண்டை என்று நடித்திருக்கிறார். தங்கம்-ஷில்பா, லஷ்மி-அஞ்சனா, பிரவீன், வையாபுரி, பயில்வான், நெல்லை சிவா, போண்டாமணி, பாவா லட்சுமணன், கிரேன் மனோகர், சிசர் மனோகர், வெங்கல்ராவ், கிருஷ்ணமூர்த்தி, சுப்புராஜ், குள்ளமணி, பாண்டு, அல்வா வாசு, வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், சுருளி மனோகர், கிளி ராமச்சந்திரன் என்று ஒரு பெரும் காமெடி நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இருந்தும், நீண்டு கொண்டே போகும் காட்சிகளும், தலையை சுற்றி மூக்கைத் தொடும் கதையும் சலிப்பு தட்டுகின்றன. அவற்றை தவிர்த்திருந்தால் எஸ்.ஆர்.வெற்றியின் ஒளிப்பதிவு, மன்சூரின் திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, ஜெயக்குமாரின் இயக்கம் எல்லாம் எடுபட்டிருக்கும்!

மொத்தத்தில், "லொள்ளு தாதா பராக் பராக்" - "ஷாக்!"



வாசகர் கருத்து (1)

Vaal Payyan - Chennai,இந்தியா
15 மார், 2013 - 15:48 Report Abuse
Vaal Payyan இந்த படம் எப்போ வந்தது ... எனக்கு தெரிஞ்சு DVD கூட வராத ஒரே படம் இது தான் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in