படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக திரையுலகில் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருபவர் நடிகை ரேவதி. இடையில் இயக்குனராக அவதாரம் எடுத்த அவர் 2002ல் 'மித்ர மை பிரண்ட்' என்கிற ஆங்கில படத்தை இயக்கினார். பின்னர் ஹிந்தியில் சல்மான்கான் அபிஷேக் பச்சனை இணைத்து 'பிர் மிலங்கே' படத்தை இயக்கினார். சிறிய இடைவெளியில் மலையாளம் மற்றும் இந்தியில் ஆந்தாலாஜி படங்களில் தலா ஒரு எபிசோடை மட்டும் இயக்கினார்.
இந்தநிலையில் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் முழு வீச்சில் டைரக்சனில் இறங்கியுள்ள ரேவதி, இந்தமுறை ஹிந்தி நடிகை கஜோலை கதையின் நாயகியாக வைத்து ஹிந்தியில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். படத்திற்கு தி லாஸ்ட் ஹுரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ரேவதி இயக்கும் படத்தில் தான் நடிப்பதை கஜோலும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்., உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்தப்படத்தில் வாழ்க்கையில் எதிர்ப்படும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் சுஜாதா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கஜோல்.