ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா | வெற்றி தீபம்... ஜனநாயகத்தின் ஒளி... : அரசியல் படமா... ‛விஜய் 69' | திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் | ‛வேட்டையன்' படம் பற்றி மஞ்சு வாரியர் என்ன சொல்கிறார் | அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது | மீண்டும் ஜோடி சேரும் விஜய், பூஜா ஹெக்டே | என் தந்தையே எனது மிகப்பெரிய விமர்சகர் : பாடகி டூ நடிகை த்வானி பனுஷாலி பேட்டி | ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி |
ராமானந்த சாகர் இயக்கத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‛ராமாயணம்' புராண தொடரில் ராவணனாக நடித்த அர்விந்த் திரிவேதி(82) உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்திய சீரியல்களில் மிகவும் பிரபலமானது தூர்தர்ஷன் டிவியில் ஒளிபரப்பான ‛ராமாயணம்'. இந்த தொடர் இந்தியாவின் பல மொழிகளிலும் வெளியானதால் பட்டிதொட்டியெங்கும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் ராமர், சீதை, அனுமன், ராவணன் என அந்த கேரக்டரில் நடித்த ஒவ்வொருவரும் நடித்தார்கள் என்பதை விட அந்த கேரக்டராகவே வாழ்ந்தவர்கள் என்று சொல்லலாம். அந்தவகையில் இந்த தொடரில் ராவணனாக நடித்து புகழ்பெற்றவர் அர்விந்த் திரிவேதி. 300க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ள இவர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். 1991-96 காலக்கட்டத்தில் பா.ஜ., சார்பில் எம்பி.,யாகவும் பதவி வகித்துள்ளார்.
மும்பையில் வசித்து வந்த அர்விந்த் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு பாலிவுட் திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ராமாயணம் சீரியலில் அவர் நடித்த காட்சிகளை குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.