'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் வெளியான தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடித்தவர் யாமி கவுதம். அந்த படம் 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் வெளியானது. அதற்குள் பாலிவுட்டில் முன்னணி நடிகை ஆகிவிட்டார் யாமி. தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கடைசியாக சமீபத்தில் வெளிவந்த பூத் போலீஸ் படத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஜூன் மாதம்தான் யாமி இயக்குனர் ஆதித்யா தர் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த நிலையில் தான் தோல் வியாதியால் அவதிப்பட்டு வருவதாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கிறது. இதனை நான் மறைத்து வந்தேன். எந்த போட்டோ ஷூட்டிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், நீ ஏன் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ஒரு குரல் கேட்டது. அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். இந்த வியாதி இருந்தால், தோலில் சின்னச் சின்ன தடிப்புகள் தோன்றும். ஆனால், அது ஒன்றும் மோசம் இல்லை.
எனக்கு சின்ன வயதில் இருந்தே இந்த பிரச்னை இருக்கிறது. இதை குணப்படுத்த முடியாது. பல ஆண்டுகளாக இப்பிரச்னை தொடர்கிறது. ஆனால், இன்றுதான் என் பயத்தை விட்டுவிட்டு, குறைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள தைரியம் வந்தது. அதோடு, என்னைப் பற்றிய உண்மையை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளும் தைரியமும் ஏற்பட்டது. இந்தக் குறை எனக்கு இருந்தாலும், என்னை நான் அழகாகவே உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.