பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

பாலிவுட்டில் ஒரு காலத்தில் ஹீரோவாக கோலோச்சியவர்கள் எல்லாம் குணச்சித்திர நடிகர்களாக மாறி விட்டார்கள். அவர்களை தென்னிந்திய மொழிகளில் அழைத்து வந்து வில்லனாக நடிக்க வைப்பது இப்போது புது டிரெண்ட் ஆகவே மாறிவிட்டது. கூடவே இந்தியிலும் அந்த படத்தை வெளியிட அது மிகப்பெரிய வசதியாகவும் இருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தெலுங்கில் சஞ்சய் தத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, கதாநாயகிகளாக பூஜா மற்றும் நபா நடேஷ் இருவரும் நடிக்க உள்ளார்களாம்.