பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். விரைவில் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில், 2017ல் தி ரிட்டன் ஆப் சாண்டர் கேஜ் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்த தீபிகா படுகோனே, அடுத்தபடியாக மீண்டும் ஒரு ரொமான்டிக் காமெடி கதையில் உருவாகும் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தை தீபிகா படுகோனேயின் கா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.