அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

பாலிவுட் நடிகரும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் சிறிது காலத்திற்கு படங்களில் நடிப்பதை தள்ளி வைத்திருக்கிறார் என்றொரு தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது. தற்போது அதுகுறித்து முழு தகவலும் தெரிய வந்துள்ளது.
அபிஷேக் பச்சன் நடிப்பில் தற்போது 'தேஸ்வி' என்கிற படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் நடித்தபோது அபிஷேக் பச்சனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து லீலாவதி மருத்துவமனையில் அவருக்கு தற்போது மேஜர் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது.
இதையடுத்து அபிஷேக் பச்சனை சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம்.