ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
ஹிந்தித் திரையுலகின் சீனியர் ஹீரோவும், பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவருமான அனில் கபூரின் இளைய மகள் ரியா கபூர், சில தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 14ம் தேதி அவரது காதலர் கரண் பூலானியைத் திருமணம் செய்து கொண்டார்.
அனில்கபூருக்கு சோனம் கபூர், ரியா கபூர் என்ற இரண்டு மகள்களும், ஹர்ஷவர்தன் என்ற மகனும் இருக்கிறார்கள். சோனம் கபூர் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துவிட்டது.
ரியா கபூர் தயாரிப்பாளராக இருக்கிறார். அவருக்கும் விளம்பரப்பட இயக்குனராக இருக்கும் கரண் பூலானிக்கும் 13 வருடக் காதல். இத்தனை வருடங்கள் கழித்து தற்போது தான் அவர்களது காதல் திருமணத்தில் முடிந்தது.
முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் நடந்த திருமணம் பற்றி அன்று காலை தான் மீடியாக்கள் அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. தனது மகள் திருமணம் குறித்து அனில் கபூர் நேற்று டுவிட்டரில், “இத்துடன், எனது பெரும் படைப்பு பூர்த்தி அடைந்ததாக நினைக்கிறேன். எங்களது இரண்டு சூப்பர் மகள்கள், மூன்று சூப்பர் மகன்கள், எங்களிடம் இதுவரையில்லாத பிளாக் பஸ்டர் இருக்கிறது. எங்களது இதயம் நிறைந்தது, எங்களது குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
ரியா கபூர் சில மணி நேரத்திற்கு முன்பாக தனது திருமணம் குறித்து இன்ஸ்டாவில், “நான் ஓடிப் போய் எனது லிவிங் ரூமில் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், அதை சாத்தியமாக்கியதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாக்கள் எப்போதும் அப்பாக்களாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இருவரது பதிவும் உதாரணம்.