தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது பெரும் லட்சியமாக இருக்கும். அந்நிய மண்ணில் அதுவும் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நேற்று பந்து வீசிய விதத்தைப் பார்த்து பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா, நேற்றைய லார்ட்ஸ் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
“மிகவும் சுவாரசியமாக உள்ளது” என கடைசி கட்ட பரபரப்பின் போதும், அடுத்து வெற்றி பெற்றதும், 'யெஸ்ஸ்ஸ்ஸ்” என்றும், பின்னர் “எப்பேர்ப்பட்ட வெற்றி, என்ன ஒரு அருமையான டீம்” என்றும் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.