இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தொடர்ந்து விஜய்யை வைத்தே அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்குவது என்பதே ஒரு சாதனை தான். பல சர்ச்சைகளுக்கு இடையே அதை சாதித்த இயக்குனர் அட்லீக்கு அடுத்ததாக கோலிவுட்டில் ஹீரோக்கள் கிடைக்கவில்லையா, அல்லது பாலிவுட் லெவலுக்கு உயர பறக்கவேண்டும் என ஆசைப்பட்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இந்தப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஆக.,15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட இருக்கிறார்கள் என்கிற தகவலும் கசிந்துள்ளது. இது தொடர்பாக அட்லீ ஷாருக்கானை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது, அதை உறுதிப்படுத்துவது போல அட்லீ அவரது மனைவி பிரியா இருவரும் ஷாருக்கானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.