'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். ஒரு வயதான பெரியவருக்கும், அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மகன் ஏற்பாடு செய்யும் சிறிய ரோபோவுக்குமான பாசப்பிணைப்பு தான் இந்த படம். நகைச்சுவை நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு இந்த படத்தில் 70 வயது கிழவராக நடித்திருந்தார். மலையாளத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படம் தமிழில் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்கிற பெயரில் உருவாகி வருகிறது. இதில் 60 வயது பெரியவராக கே எஸ் ரவிக்குமார் நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையும் வாங்கப்பட்டுள்ளது. இதன் ஹிந்தி ரீமேக்கில் வயதான கதாபாத்திரத்தில் அனில் கபூர் நடிக்க இருக்கிறார் என்கிற செய்திகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் தென்னிந்திய மொழிகளில் ஹிட்டான படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்தே நிறைய வெற்றிகளை குவித்தவர் தான் அனில்கபூர். அதேசமயம் நிஜத்திலேயே அவருக்கு அறுபது வயதானாலும் எப்போதும் இளமைத் தோற்றத்துடன் தான் வலம் வருகிறார். படங்களிலும் அப்படியே நடித்து வருகிறார். சுராஜ் வெஞ்சாரமூடு போலவோ கேஎஸ் ரவிக்குமார் போலவோ வயதான தோற்றத்தில் நடிக்க அவர் முன் வருவாரா, அப்படியே நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தில் அவரால் பொருந்த முடியுமா என்பது சந்தேகம் தான்.