ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
ரஞ்சித் எம் திவாரி இயக்கத்தில் அக்ஷய்குமார், ஹுமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பெல்பாட்டம்'. 1984ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு விமான கடத்தல் கதைதான் இப்படம்.
உளவுத் துறையான ரா ஏஜன்ட் ஆக அக்ஷய்குமார் நடிக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியானது. 24 மணி நேரத்தில் 2 கோடியே 32 லட்சம் பார்வைகளும் 4 லட்சத்திற்கு கூடுதலான லைக்குகளும் இந்த டிரைலருக்குக் கிடைத்துள்ளது.
2021ம் ஆண்டில் வெளிவந்த டிரைலர்களில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையை இந்த 'பெல்பாட்டம்' படைத்துள்ளது. இந்த வருடத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த 'ராதே' படத்தின் டிரைலர் 5 யு டியுப் சேனல்களில் வெளியாகி 2 கோடியே 20 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், 12 லட்சம் லைக்குகளைப் பெற்றது.
முந்தைய அக்ஷய் குமார் படங்களில் சிலவற்றை ஒப்பிடும் போது பெல்பாட்டம் டிரைலரின் 24 மணி நேர சாதனை குறைவாகத்தான் உள்ளது.