கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | பொன்னியின் செல்வன் - ஆதித்ய கரிகாலனாக விக்ரம் : புதிய போஸ்டர் வெளியீடு | விரைவில் புதிய வீட்டில் குடியேறும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! | நிஜத்தில் கேஜிஎப் போல தான் வாழ்க்கை இருக்கிறது ; சமந்தா |
அர்ஜுன் நடித்த அரசாட்சி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற லாரா தத்தா.. தற்போது அக்சய் குமார், ஹூமா குரோஷி, வாணி கபூர் ஆகியோருடன் இணைந்து ஹிந்தியில் உருவாகியுள்ள பெல்பாட்டம் படத்தில் நடித்துள்ளார் லாரா தத்தா. இந்த படத்தை ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் மறைந்த இந்திய பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லாரா தத்தா.
அப்படி இந்திரா காந்தியின் தோற்றத்தில் இவர் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளன. பொதுவாக நடிகர்கள் தான் இவ்வளவு தூரம் உருவ மாற்றலுக்கு மெனக்கெடுவதை பார்த்துள்ளோம். அந்தவகையில் லாரா தத்தாவின் உருவ மாற்றத்தை பார்க்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.