'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப் குமார்(98) இன்று காலை காலமானார். இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார் ஹிந்தி சினிமாவில் முடிசூடா மன்னராக திகழ்ந்தார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவார் பகுதியில் 1922ம் ஆண்டு பிறந்த முகம்மது யூசுப் கான் தான் சினிமாவில் திலீப் குமார் என்கிற பெயரில் பிரபலமானார். ஹிந்தி சினிமாவின் இப்போதைய முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கானுக்கெல்லாம் முன்பே பாலிவுட்டின் முதல் கான் நடிகர் என்கிற பெருமைக்குரியவராக திலீப் குமார் திகழ்ந்தார். அண்டாஸ், ஆன், தேவதாஸ், கங்கா ஜமுனா, ராம் அவுர் ஷியாம் என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளவர், கடைசியாக 1998ம் ஆண்டு கில்லா எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.