பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பாலிவுட் கவர்ச்சி நடிகை ஹீனா பன்ஞ்சல். லைப் மெய்ன் டுவிட்ஸ் ஹை, மனுஷ் ஏக் மதி, பாபுஜி ஏன் டிக்கெட் பாம்பே, உள்பட ஏராளமான படங்களில் நடித்தும், ஒரு பாடலுக்கு ஆடியும் உள்ளார். தமிழ் படமான யாகாவாராயினும் நாகாக்க, கன்னட படமான லொட்டு, தெலுங்கு படமான மல்லிபு படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். மராட்டிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஏராளமான மராட்டிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.
அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஹீனா பாஞ்சலும் ஒருவர். "அந்த விருந்து நிகழ்ச்சியில் ஹீனா பாஞ்சல் தொழில்முறையில் நடனமாடவே சென்றார். அந்த பார்ட்டியில் அவர் பங்கேற்பாளரும் இல்லை. அவர் போதை மருந்து எதையும் உட்கொள்ளவில்லை" என்றும் ஹீனா பாஞ்சல் தரப்பு தெரிவிக்கிறது.